தமிழ் திரை உலகின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் யோகிபாபு அடுத்ததாக தளபதி விஜய் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகி வரும் #தளபதி66 திரைப்படத்தில் நகைச்சுவை வேடத்தில் நடித்து வருகிறார். முன்னதாக யோகி பாபு காமெடியனாக நடித்துள்ள தி லெஜண்ட் மற்றும் யானை ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன.

மேலும் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள நானே வருவேன், சிவகார்த்திகேயன் நடிப்பில் சயின்ஸ் ஃபிக்ஷன் ஏலியன் திரைப்படமாக தயாராகியிருக்கும் அயலான், இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் ஜீவா மற்றும் ஜெய் இணைந்து நடித்துள்ள காஃபி வித் காதல் உள்ளிட்ட திரைப்படங்களிலும் யோகிபாபு நடித்துள்ளார்.

நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல் முன்னணி கதாபாத்திரங்களிலும் கதாநாயகனாகவும் நடித்து வரும் யோகி பாபு நடிப்பில் பன்னிகுட்டி, காசேதான் கடவுளடா, சலூன் ஆகிய திரைப்படங்களும் தயாராகி வருகின்றன. இந்த வரிசையில் அடுத்ததாக நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடித்த பாரிஸ் ஜெயராஜ் மற்றும் A1 திரைப்படங்களின் இயக்குனர் ஜான்சன் இயக்கத்தில் உருவாகும் மெடிக்கல் மிராக்கில் படத்தில் யோகிபாபு கதாநாயகனாக நடிக்கிறார்.

இயக்குனர் ஜான்சன் தனது A1 ப்ரொடகக்ஷன்ஸ் சார்பில் தயாரிக்கும் மெடிக்கல் மிராக்கிள் படத்தில் குக் வித் கோமாளி தர்ஷா குப்தா கதாநாயகியாக நடிக்கிறார். இந்நிலையில் மெடிக்கல் மிராக்கல் திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று(ஜூன் 16) பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மெடிக்கல் மிராக்கில் படத்தின் படப்பூஜை புகைப்படங்கள் இதோ…
 

. @a1productions22 launches a new project #MedicalMiracle starring @iYogiBabu and @DharshaGupta with an auspicious puja this morning. #A1 and #ParrisJayaraj Dir #Johnson K will be directing and producing the movie. #SiddharthVipin @Vivanthhero #DharaniV @teamaimpr pic.twitter.com/yOhmjWtzr6

— Team AIM (@teamaimpr) June 16, 2022