ரசிகர்களின் ஃபேவரட் ஹீரோயினாகவும் தென்னிந்திய திரை உலகில் முன்னணி நட்சத்திர நாயகியாகவும் திகழும் நடிகை கீர்த்தி சுரேஷ் அடுத்ததாக இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வைகைபுபுயல் வடிவேலு, ஃபகத் ஃபாசில் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருடன் இணைந்து மாமன்னன் திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மாமன்னன் திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

தொடர்ந்து தெலுங்கில் வேதாளம் படத்தின் ரீமேக்காக மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கும் போலா ஷங்கர் படத்தில் கீர்த்தி சுரேஷ், சிரஞ்சீவியின் தங்கையாக நடித்து வருகிறார். இந்த வரிசையில் அடுத்ததாக மலையாளத்தில் கீர்த்தி சுரேஷ் மற்றும் டொவினோ தாமஸ் இணைந்து நடித்துள்ள திரைப்படம் வாஷி. 

இயக்குனர் விஷ்ணு.ஜி.ராகவ் இயக்கத்தில் உருவாகியுள்ள வாஷி திரைப்படத்திற்கு ராபி வர்கீஸ் ஒளிப்பதிவு செய்ய, கைலாஷ் மேனன் இசையமைத்துள்ளார். ஜி.சுரேஷ் குமார் நிறுவனம் சார்பில் மேனகா சுரேஷ் மற்றும் ரேவதி சுரேஷ் இணைந்து தயாரித்துள்ளனர். வாஷி திரைப்படம் இன்று ஜூன் 17ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.

இந்நிலையில் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் வாஷி திரைப்படத்தின் பாடல்கள் வெளியானது. வாஷி படத்தின் அனைத்து பாடல்களும் அடங்கிய JUKEBOX வீடியோ தற்போது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. அந்த JUKEBOX வீடியோ இதோ…