ஆணழகனை ஆசை நாயகனாக வைத்திருந்த பெண் பேராசிரியை ஒருவர், “தன்னை கழற்றிவிட்டு விட்டு, வேறொரு பெண்ணை திருமணம் செய்ததால்” கள்ளக் காதலனை கொன்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

கர்நாடக மாநிலம் கோலார் டவுன் கல்பேட்டையில் உள்ள மகாலட்சுமி லே அவுட் பகுதியைச் சேர்ந்த 25 வயதான ஜமீரர் என்ற இளைஞர், தனது பெற்றோருடன் வசித்த வந்தார்.

இவர் உடற்பயிற்சியில் அதிக ஈடுபாடு கொண்டவர் என்பதால், தினமும் உடற்பயிற்சி கூடத்திற்குச் சென்று, தனது உடலை ஒரு ஆண் அழகனைப் போன்று ஒரு கட்டுக் கோப்பான உடற்கட்டு கொண்டு இருந்தார். 

அத்துடன், அந்த மாநிலத்தில் நடைபெற்ற ஆணழகன் போட்டியிலும் பங்கேற்று, இவர் தொடர்ச்சியாகப் பல பரிசுகளையும் பெற்றிருக்கிறார். 

இந்த சூழ்நிலையில் தான் 25 வயதான ஆண் அழகன் ஜமீருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த 45 வயதான ஷாகியா என்ற கல்லூரி பெண் பேராசிரியைக்கும் அறிமுகம் ஏற்பட்டு, நட்பாகப் பழகி வந்துள்ளனர். இந்த நட்பு, நாளடைவில் அவர்களுக்குள் கள்ளக் காதலாக மாறி உள்ளது.

இதனையடுத்து, அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தனர். இப்படியாக, இவர்களது உல்லாச வாழ்க்கை சில காலம் இப்படியே சென்று உள்ளது.

இந்த நிலையில், 25 வயதான ஆண் அழகன் ஜமீருக்கு, அவரது பெற்றோர் வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் செய்து வைக்கச் செய்து, அது தொடர்பாக வரன் பார்க்கத் தொடங்கி உள்ளனர்.

இந்த விசயம், கள்ளக் காதலியான ஷாகியாவுக்கு தெரிய வந்த நிலையில், அவர் கடும் அதிர்ச்சியடைந்தார். இதனையடுத்து, “நீ வேறொரு பெண்ணை திருமணம் செய்யக் கூடாது” என்று, தனது கள்ளக் காதலன் ஜமீரிடம் கூறி, அவர் வாக்குவாதம் செய்து வந்தார். இதனை அவர் ஏற்றுக்கொள்ள மறுக்கவே, அவர்களுக்குள் தொடர்ந்து சண்டை அதிகரித்த வண்ணம் இருந்தன.

இப்படியான நிலையில் தான், கடந்த சில மாதங்களுக்கு முன்பு 25 வயதான ஜமீர், தனது பெற்றோர் பார்த்த படி, வேறொரு பெண்ணை முறைப்படி திருமணம் செய்து கொண்டார். 

இதனையடுத்து, தனது கள்ளக் காதலியான ஷாகியாவை பார்ப்பதையே, அவர் முற்றிலுமாக தவிர்த்து வந்தார். இதனால் கள்ளக் காதலி ஷாகியா, தனது கள்ளக் காதலன் மீது கடும் கோவமாக இருந்து வந்தார். இதனால், ஒரு கட்டத்தில் கடும் மன உளைச்சலுக்கு ஆளான அவர், “தனக்கு கிடைக்காத கள்ளக் காதலன், வேறு யாருக்கும் கிடைக்கக் கூடாது” என்று, முடிவு செய்து தனது கள்ளக் காதலனை கொலை செய்யவும் முடிவு செய்தார். 

அதன் படி, அந்த பகுதியைச் சேர்ந்த கூலிப்படையினுக்குக் கல்லூரி பெண் பேராசிரியை ஷாகியா, பணம் கொடுத்து, காதலன் ஜமீரரை கொலை செய்யக் கூறியிருக்கிறார்.

அதன் படி, காதலியான கல்லூரி பெண் பேராசிரியை ஷாகியா, தனது காதலன் ஜமீரை ஐதராபாத்துக்கு வர சொல்லியிருக்கிறார். 

அவரின் பேச்சை கேட்டு நம்பி சென்ற ஜமீரை, அந்த கள்ளக் காதலி கூலி படையை ஏவி அப்போது கொலை செய்து, அந்த பகுதியிலேயே புதைத்து விட்டார். 

அதன் பிறகு, “என் கணவரை காணவில்லை” என்று, அவரின் மனைவி அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, இது குறித்து, வழக்குப் பதிவு செய்து, தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.

அதன் படி, கொலை செய்யப்பட்ட ஜமீரருக்கு கடைசியாக வந்த செல்போன் அழைப்பை வைத்து, போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்த நிலையில், ஜமீரை கொன்ற கள்ளக் காதலி ஷாகியாவையும், அவர் ஏவி விட்ட கூலிப்படையினையும் போலீசார் தற்போது அதிரடியாகக் கைது செய்து உள்ளனர். அவர்களிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.