மருமகளோடு மாமனார் கள்ளக் காதலில் இருந்ததை நேரில் பார்த்த மகன், இருவரையும் கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

மத்தியப் பிரதேசம் மாநிலம் ஜபல்பூர் மாவட்டத்தில் இருக்கும் பால்கேடா காவல் நிலைய எல்லைக்குள் உட்பட்ட கோகலஹார் கிராமத்தைச் சேர்ந்த 35 வயதான சந்தோஷ் லோதி என்பவர், தனது குடும்பத்துடன் வசித்து வந்தார்.

சந்தோஷ் லோதியின் குடும்பத்தில் அவரது தாயார் உயிரிழந்துவிட்ட நிலையில், 65 வயதான தந்தை அமன் லோதி, மற்றும் மனைவி கவிதா ஆகியோருடன் அவர்கள் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். 

மகிழ்ச்சியாகச் சென்ற அவர்களது வாழ்வில், புயல் வீசத் தொடங்கியிருக்கிறது.

அதாவது, கணவன் சந்தோஷ் லோதி, தனது வேலை விசயமாக அடிக்கடி வெளியூர் செல்வதால், அவருடைய மனைவியை, 65 வயதான தந்தையின் பாதுகாப்பில் வீட்டில் விட்டு செல்வது வழக்கம்.

அப்படியான நிலையில், சந்தோஷ் லோதியின் 65 வயதான தந்தைக்கும், சந்தோஷ் லோதியின் மனைவிக்கும் இடையே கள்ளக் காதல் ஏற்பட்டு, அவர்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர்.

இந்த கள்ளக் காதல் விசயம், அக்கம் பக்கத்தினருக்குத் தெரிய வந்த நிலையில், அவர்கள் மூலமாக ஒரு கட்டத்தில் கணவன் சந்தோஷ் லோதியின் கவனத்திற்கும் இது வந்துள்ளது.

ஆனால், இதனைத் துளியும் நம்பாத சந்தோஷ் லோதி, தனது மனைவி மற்றும் தந்தையைப் பற்றி தவறாகச் சொல்பவர்களிடம் சண்டைக்குச் சென்று உள்ளார்.

இந்த சூழ்நிலையில் தான், நேற்று முன் தினம் 2 ஆம் தேதி வெள்ளிக் கிழமை அன்று கணவன் சந்தோஷ் லோதி, வேலை விசயமாக வெளியூர் சென்று விட்டு வீடு திரும்பி உள்ளார்.

அப்போது, வீட்டிற்குள் நுழைந்த சந்தோஷ் லோதி, அப்படியே கடும் அதிர்ச்சியாகி நின்று உள்ளார். அதற்குக் காரணம், வீட்டின் உள்ளே, சந்தோஷ் லோதியின் தந்தையும், மனைவியும் கள்ளக் காதல் உறவில் உல்லாசமாக ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

இதனைப் பார்த்து கடும் அதிர்ச்சியும், கோபமடைந்த சந்தோஷ் லோதி, வீட்டில் இருந்த கோடாரியை எடுத்து, அங்கேயே இருவரையும் சரமாரியாக வெட்டி சாய்த்து உள்ளார். இதில், இருவரும் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

இது குறித்து விரைந்து வந்த போலீசார், இருவரின் உடலையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அத்துடன், கொலை செய்த கோடாரியுடன் சந்தோஷ் லோதி, தனது வீட்டு வாசலில் ரத்த கரையோடு அமர்ந்திருந்தார். அதனைப் பார்த்த போலீசார், அவரை கைது செய்து விசாரணைக்காகக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இச்சம்பவம்,  அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.