பிரபல நடிகையும் ஆந்திர மாநிலத்தின் நகரி தொகுதியின் எம்எல்ஏவுமான நடிகை ரோஜா, தனது கணவரும் பிரபல இயக்குனருமான ஆர். கே. செல்வமணியுடன் பொது மக்கள் முன்னிலையில் ஆடுகளத்தில் கபடி விளையாடிய வீடியோவானது இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.  

தமிழ் திரையுலகில் பிரபல நடிகையான ரோஜா, ஆந்திர மாநிலத்தின் நகரி தொகுதியின் எம்எல்ஏவுமாக இருந்து வருகிறார். 

கடந்த 2019 ஆம் ஆண்டு ஆந்திராவில் நடந்த சட்டமன்ற தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்து வருகிறது. அதன் படி, அங்கு ஜெகன்மோகன் ரெட்டி முதலமைச்சராக இருந்து வருகிறார். 

அத்துடன், அங்கு அக்கட்சியின் சார்பாக அங்குள்ள நகரி தொகுதியில் போட்டியிட்ட நடிகை ரோஜா, வெற்றிப் பெற்று எம்எல்ஏ ஆனார்.

இந்த சூழலில் தான், ஒய்எஸ்ஆர் கட்சியின் நகரி தொகுதியின் எம்எல்ஏவான நடிகை ரோஜா, தனது தொகுதியில் பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்களில் மற்றும்  பல்வேறு இடங்களில் நடக்கும் கபடி போட்டிகளில் பங்கேற்று சிறப்பாக விளையாட்டு வீரர்களை ஊக்குவித்து அவர்களுக்கு பரிசுகளும் வழங்கி வருகிறார்.   தொடர்ந்து கபடி விளையாடும் வீரர்களை அவர் தொடர்ந்து உற்சாகமூட்டி வருகிறார்.

இந்த நிலையில்,  சித்தூர் மாவட்டம் நகரி அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் நடந்த கபடி போட்டியில் இன்று மாலை தலைமை ஏற்று, அந்த போட்டியினை நடிகை ரோஜா சிறப்பாக நடத்திக்கொண்டுத்தார். 

இந்த போட்டியின் போது, கபடி வீரர்களுடன் எதிரெதிர் அணியில் நடிகை ரோஜாவும், அவரது கணவர் ஆர். கே. செல்வமணியும் கபடி விளையாடினார்கள்.

முக்கியமாக, நடிகை ரோஜா கபடி விளையாடி விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்திய போது, அங்கு திரண்டு நின்ற பொது மக்களும், சக பார்வையாளர்களின் கூட்டமும், விசிலடித்து ஆரவாரம் செய்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 

குறிப்பாக, போட்டியில் பங்கேற்ற சக விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்திய நடிகை ரோஜா, அதன் தொடர்ச்சிசாயாக செய்தியாளர்களிடம் பேசினார். 

அப்போது, தனது குழந்தைப் பருவ நினைவுகளையும், தனது விளையாட்டு அனுபவங்களையும் அப்போது அவர் பகிர்ந்து கொண்டு உள்ளார்.

இதனிடையே, பிரபல நடிகையும் ஆந்திர மாநிலத்தின் நகரி தொகுதியின் எம்எல்ஏவுமான நடிகை ரோஜா, தனது கணவர் ஆர். கே. செல்வமணியுடன் பொது மக்கள் முன்னிலையில் ஆடுகளத்தில் கபடி விளையாடிய வீடியோவானது, தற்போது இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.