கேரளாவில் இரண்டு மருத்துவ மாணவர்கள் ரஸ்புடின் பாடலுக்கு நடனமாடிய வீடியோ வைரலாகியது. ஜானகி மற்றும் நவீன் என்ற மருத்துவ மாணவர்கள் ரஸ்புடின் என்ற பிரபல பாடலுக்கு நடனமாடிய வீடியோவை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியிருந்தனர்.

அதன்பிறகு, பாஜக ஆதரவாளர் ஒருவர் இந்த வீடியோவை குறித்த கருத்தை தெரிவித்து... அதற்கு பெரும் சர்ச்சையாக மாறியது. 

திருச்சூர் மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த இரண்டு மருத்துவ மாணவர்கள் - நவீன் கே ரசாக் மற்றும் ஜானகி எம் ஓம்குமார் , இருவரும் ’Boney M. - Rasputin’ புகழ்பெற்ற ரஸ்புடின் பாடலுக்கு நடனமாடிய வீடியோ நடனமாடி வந்தது வைரலாகி இருந்தது. இதனையடுத்து, வழக்கறிஞரும், பாஜக ஆதரவாளர் கிருஷ்ணா ராஜ், ‘வீடியோவில் நடனமாடும் பெண் ஜானகியின் பெற்றோர் கவனமாக இருக்க வேண்டும். நவீன் ஒரு முஸ்ஸீம்’ என்று பதிவிட்டார். 

இது கேரளாவில் பெரும் சர்ச்சையையும் எதிர்ப்பையும் ஒரு சேர கிளப்பியது. இதற்கு மற்ற மருத்துவ மாணவர்கள் குழு கண்டன குரல்களும் தெரிவித்தது. மேலும் கண்டன குரல்களையும் தாண்டி நவீன் மற்றும் ஜானகிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பலர் அதே பாடலுக்கு நடனமாடி வீடியோ வெளியிட்டு வந்தனர்.

திருச்சூர் மருத்துவக் கல்லூரியின் கல்லூரியின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில், ஆதரவாக அதே பாடலுக்கு நடனத்தை ஆடும் மற்ற மாணவர்களின் வீடியோ பகிரப்பட்டுள்ளது. அந்த வீடியோவின் இறுதியில் ஜானகி மற்றும் நவீன் வருகிறார்கள். இந்த மொத்தம் வீடியோ சொல்லும் செய்தியாக’’ உங்களது நோக்கம் வெறுப்பாக இருந்தால், அதை எதிர்ப்பதே எங்கள் முடிவு.. #resisthate ” என்ற ஒரு வலுவான செய்தியைச் சொல்கிறது அந்த வீடியோ..

’Boney M. - Rasputin’ பாடல் உலக அளவில் பிரபலமாகி பலர் நடனமாடி வருகின்றனர். அதேபோல் நவீன் மற்றும் ஜானகி என்ற மருத்துவ மாணவர்கள் நடனமாடிய வீடியோ வைரலாகி, பின்.. சர்ச்சையாகி உள்ளாக்கப்பட்டதைத் தொடர்ந்து மதவாதத்திற்கு எதிரான #resisthate, என்ற ஒரு வலுவான கருத்து முன்வைத்து தங்களது ஒற்றுமையால் அழகான மற்றும் வலுவான மெசேஜ்யை கொடுத்துள்ளார்கள் கேரள மருத்துவ மாணவர்கள்.