செக்ஸ் மாத்திரைக்கு ஆசைப்பட்ட இளைஞர் ஒருவர், இணையத்தில் நூதன மோசடியில் சிக்கி 2.17 லட்சம் ரூபாய் பணத்தை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பெங்களூருவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தான், இந்த மோசடியில் சிக்கி ஏமார்ந்து உள்ளார்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஒட்டிய பெலந்தூர் பகுதியைச் சேர்ந்த சரவணன் (பெயர் மாற்றப்பட்டு உள்ளது) என்ற இளைஞர், அந்த பகுதியில் ஆட்டோ டிரைவராக உள்ளார். அவரை, செல்போனில் தொடர்புகொண்ட மர்ம நபர்கள், “நாங்கள் விற்பனை செய்யும் செக்ஸ் மாத்திரையை வாங்குவதற்கான கூப்பனை நீங்கள் வென்று விட்டீர்கள் என்றும், அதற்கான வரியை மட்டும் நீங்கள் செலுத்தினால், பணத்துடன் கூடிய மாத்திரைகள் உங்களுக்கு நாங்கள் தருவோம் என்றும், ஆசை ஆசையான வார்த்தைகளைக் கூறி, சரவணன் மனதை மாற்றி உள்ளனர்.

இதன் படி, “குறிப்பிட்ட இந்த மெடிசன் விலை பல லட்சம் ரூபாய் மதிப்பிலான என்று கதைவிட்ட அந்த மர்ம நபர்கள், இவற்றுடன் மிகப் பெரிய தொகை ஒன்றையும் வழங்குவதாகவும் அவர்கள் கூறியிருக்கிறார்கள். 

இப்படியாக, 2 வெவ்வேறு தொலைபேசி எண்களில் இருந்து ஆட்டோ டிரைவரை தொடர்பு கொண்ட அந்த மர்ம நபர்கள், அவரை தங்களது சதி திட்டத்தில் வீழ்த்தியிருக்கிறார்கள். 

இதனால், “தனக்கு செக்ஸ் மாத்திரைகளுடன் சேர்த்து பணமும் கிடைக்கப் போகிறது” என்று நம்பிய ஆட்டோ டிரைவர் சரவணனிடம் செல்போன் மூலமாகத் தொடர்புகொண்ட இணையக் கொள்ளையர்கள் கிட்டத்தட்ட 2.17 லட்சம் ரூபாயை நூதன முறையில் ஏமாற்றிப் பெற்று உள்ளனர்.

அதே நேரத்தில், செல்போனில் மர்ம நபர்கள் கூறியது போல், காமசூத்திரா செக்ஸ் கோல்டு மெடிசன் மற்றும் பணம் ஆகியவை அவருக்கு கடைசி வரை வரவே இல்லை.

இப்படியாக, தான் சேமித்து வைத்திருந்த எல்லா பணத்தையும் இழந்த பிறகே சரவணனுக்கு, தான் ஏமாற்றப்பட்டது சரவணனுக்குத் தெரிய வந்திருக்கிறது. அதுவும், 2.17 லட்சம் ரூபாய் பணம் கொடுத்து பிறகு சில நாட்கள் கழித்தே அவருக்கு தான் ஏமாற்றப்பட்டது தெரிய வந்திருக்கிறது.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த சரவணன், அங்குள்ள CEN காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், முதலில் பாதிக்கப்பட்ட நபரிடம் விசாரணை நடத்தினர்.

மேலும், இணையத்தில் நூதன முறையில் கொள்ளையில் ஈடுபட்ட அந்த மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு, அவர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்த செய்தி, இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.