மனைவியின் கள்ளக் காதலை கண்டுபிடித்த கணவனை, காதலனோடு சேர்ந்து மனைவியே கொன்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஐதராபாத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்திருக்கிறது.

ஐதராபாத்தில் உள்ள கர்மிகா நகர் பகுதியில் முகமது சித்திக் அஹ்மத் என்பவர்,  தன்னுடைய மனைவி ரூபி உடன் வசித்து வந்தார். 

அத்துடன், முகமது சித்திக் அஹ்மத், அப்பகுதியில் டைலராக பணியாற்றி வந்தார்.

இப்படியான நிலையில், முகமது சித்திக் அஹ்மத் மனைவி ரூபினா, கடை மற்றும் வெளியில் சென்று வருதற்காக ஒரு இருசக்கர வாகனம் வைத்திருந்தார். 

அந்த வாகனம் அடிக்கடி பழுதானதால், அவற்றை சரி செய்ய அடிக்கடி அங்குள்ள ஒரு மெக்கானிக் கடைக்கு சென்று வந்திருக்கிறார்.

அப்போது, ரூபினாவுக்கு அதே பகுதியைச் சேர்ந்த மெக்கானிக் 22 வயதான மொஹமட் அலி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில் கள்ளக் காதலாக மாறி உள்ளது. 

இதனால், கள்ளக் காதலர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து தொடர்ந்து உல்லாசம் அனுபவித்து வந்தனர். ரூபி தனது கணவருக்குத் தெரியாமல், இப்படி ஒரு உல்லாச வாழ்க்கையை, தனது கள்ளக் காதலன் உடன் வாழ்ந்து வந்தார்.

கணவன் வீட்டிலிருந்து தினமும் காலையில் டைலர் கடைக்கு சென்றதும், அந்த பகுதியில் உள்ள குறிப்பிட்ட அந்த மெக்கானிக், காதலியைப் பார்க்க அவரது  வீட்டிற்கு வந்து உல்லாசம் அனுபவிப்பதை வாடிக்கையாகக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இப்படி, தினமும் அந்த உல்லாசம் தொடர்ந்திருக்கிறது.

இப்படியாக சில மாதங்கள் தொடர்ந்த நிலையில், மனைவி ரூபினாவின் கள்ளக் காதல் வாழ்க்கை, கணவர் முகமது சித்திக் அஹ்மத்க்கு தெரிய வந்தது. இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அவர் கள்ளக் காதலர்கள் இருவரையும் கையும் களவுமாகப் பிடிக்க காத்திருந்தார். 

அதன்படி, ஒரு நாள் இருவரும் உல்லாச இன்பத்தில் ஈடுபட்டிருந்த போது, அவர்கள் இருவரையும் கணவன் முகமது சித்திக் அஹ்மத்திடம் கையும் களவுமாக மாட்டிக்கொண்டனர். 

அப்போது, அவர்களை அவர் கடுமையாக எச்சரித்து உள்ளார். இதனால், பயந்துபோன காதலன் மெக்கானிக், அங்கிருந்து ஓட்டம் பிடித்தான்.

இதனையடுத்து, முகமது சித்திக் அஹ்மத் தன்னுடைய மனைவியைத் தினமும் டார்ச்சர் செய்து அடித்துத் துன்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. 

இப்படி, கணவனின் தொந்தரவு தாங்க முடியாமல், அவரின் மனைவி இந்த விஷயத்தைத் தனது கள்ளக் காதலன் மொஹெமட் அலியிடம் கூறி அழுதிருக்கிறார்.

அதன்படி, அவர்கள் இருவரும் சேர்ந்து கணவன் முகமது சித்திக் அஹ்மத்தை கொலை செய்யத் திட்டம் போட்டனர்.

திட்டப்படி அந்த கணவர் முகமது சித்திக் அஹ்மத், கடந்த மார்ச் 22 ஆம் தேதி அன்று தனது மாமியார் வீட்டில் இருந்து உள்ளார். அப்போது, அவரது மனைவி ரூபினா, தனது காதலன் அலிக்கு போன் செய்து இந்த விஷயத்தை கூறியிருக்கிறார். 

இது தொடர்பாக உடனே அங்கு வந்த அலி கணவர் சித்திக்கை ஒரு ஸ்க்ரூ டிரைவரை கொண்டு கடுமையாகத் தாக்கி கொலை செய்து உள்ளார். இதனையடுத்து, இது நாள் வரையில் அவர்கள் நாடகம் ஆடி வந்துள்ளனர்.

இந்நிலையில், இந்த கொலை சம்பவம் பற்றி இறந்த சித்திக்கின் சகோதரர் ஒருவர், அந்த பகுதியில் உள்ள போலீசாருக்கு தகவல் தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிரமாக விசாரணை நடத்தினர். அப்போது, அவரின் மனைவியே கள்ளக் காதலனோடு சேர்ந்து கணவனை கொன்றது தெரிய வந்தது. இதனையடுத்து, கள்ளக் காதலர்கள் இருவரையும் கைது செய்த போலீசார், இருவரிடமும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.