இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விஷால் மற்றும் ஆர்யா இணைந்து நடித்து வரும் திரைப்படம் எனிமி. இப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. படத்தில் பிரகாஷ்ராஜ், மிருணாளினி, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். ஹைதராபாத்தில் முதற்கட்டப் படப்பிடிப்பை முடித்துவிட்டு, சென்னையில் சில காட்சிகளைப் படமாக்கினர். 

இந்தப் படத்தில் விஷாலுக்கு நாயகியாக மிருணாளினி நடித்து வருகிறார். ஆர்யா ஜோடியாக நடிகை மம்தா மோகன்தாஸ் ஒப்பந்தமாகினார். எனிமி படத்தை மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் வினோத் தயாரித்து வருகிறார். இசையமைப்பாளராக தமன், ஒளிப்பதிவாளராக ஆர்.டி.ராஜசேகர், கலை இயக்குநராக டி.ராமலிங்கம் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். 

கையில் துப்பாக்கியுடன் விஷால் கொண்ட போஸ்டர் மற்றும் சாங்கி சிறையில் இருக்கும் கைதியாக ஆர்யாவின் லுக் கொண்ட போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. அதன் பின்னர் 50 அடி உயரத்தில் உள்ள ஒரு கட்டிடத்தின் மேல் விஷால் அட்டகாசமாக நிற்பது போன்ற ஒரு புதிய ஸ்டில்லை எனிமி படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர். இதை பார்த்த ரசிகர்களோ ஆக்ஷன் காட்சிகளை படக்குழுவினர் படமாக்கி வருவதாக பதிவு செய்து வந்தனர். 

கடைசியாக துபாய் ஷூட்டிங்கை படக்குழுவினர் நிறைவு செய்த அப்டேட் கிடைத்தது. இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் தரமான அப்டேட்டை தந்துள்ளார். 

90 சதவித படப்பிடிப்பு முடிவடைந்ததாம். 10 நாட்கள் கொண்ட சென்னை படப்பிடிப்பு மீதம் உள்ளதாம். விரைவில் டீஸர் வெளியாகும் என்ற தகவலையும் தயாரிப்பாளர் பதிவு செய்துள்ளார். இதனால் மிகுந்த ஆவலில் உள்ளனர் ரசிகர்கள்.