வீட்டிலிருந்து ஓடி வந்த பெண்ணை, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துக்குள் வைத்து கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கேரளா மாநிலம் கோழிக்கோட்டில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

கேரளா மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள செவாயூரில் 21 வயதான இளம் பெண் ஒருவர், தன்னுடைய பெற்றோருடன் வசித்து வந்தார். 

தற்போது கொரோனா ஊரடங்கு காலம் என்பதால், ஒரு வருடத்திற்கும் மேலாக வீட்டிலேயே இருந்து வந்த அந்த பெண், அடிக்கடி தன்னுடைய பெற்றோருடன் சண்டை போட்டுக்கொண்டே இருந்து உள்ளார்.

ஒரு கட்டத்தில், பெற்றோருடன் சண்டை போட்டுவிட்டு, அந்த பெண் கோபத்தில் வீட்டை வீட்டை வெளியே செல்வதும், பின்னர் கோபம் குறைந்ததும் 

மீண்டும் வீட்டுக்கு வருவதுமாக அந்த பெண் இருந்திருக்கிறார். இதனையே, அந்த பெண் தொடர்ந்து செய்துகொண்டு இருந்து உள்ளார்.

இதனால், அந்த பெண் சண்டைபோடுவதை, அவரது பெற்றோர் ஒரு கட்டத்திற்குப் பிறகு பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்று தெரிகிறது. 

அத்துடன், அந்த இளம் பெண்ணிற்கு மன நலம் சற்று பாதிப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. 

இந்த நிலையில் தான், அந்த 21 வயதான இளம் பெண், கடந்த வாரம் எப்போதும் போல் தனது பெற்றோரிடம் சண்டை போட்டுவிட்டு, வீட்டில் இருந்து கோபித்துக்கொண்டு வெளியே சென்று உள்ளார். தனது ஊரில் இருந்து சற்று தொலைவிற்குச் சென்ற அந்த இளம் பெண், அந்த பகுதியில் உள்ள ஓரிடத்தில் நின்று கொண்டிருந்தார். 

அப்போது, அந்த ஊரைச் சேர்ந்த கோபிஷ், முகமது ஷமீர், குன்னமங்கலம் பகுதியைச் சேர்ந்த இந்திரேஷ் ஆகிய 3 பேரும் அந்த பெண்ணிடம் வந்து, தாங்களாகவே வந்து தங்களை அறிமுகம் செய்துகொண்டு, அந்த பெண்ணிடம் ஆசை ஆசையாகப் பேசி, அந்த பெண்ணை கவர்ந்து உள்ளனர்.

அவர்கள் 3 பேரையும் நம்பிய அந்த பெண், “நான் வீட்டை விட்டு ஓடி வந்துவிட்டேன்” என்று, அந்த பெண் உண்மையாகப் பேசி, தனது நிலையை அவர்களிடம் கூறியிருக்கிறார். 

இதனைக் கேட்ட அவர்கள் 3 பேரும், அந்த பெண்ணிற்குப் பிடித்த மாதிரி பேசி, அந்த 3 பேரும் அந்த இளம் பெண்ணை அங்கு ரிப்பேர் ஆகி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தில் தூக்கிச் சென்று மாறி மாறி கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதனால், அந்த பெண் கடும் அதிர்ச்சியடைந்து கதறித் துடித்து உள்ளார்.

இதனையடுத்து, அந்த பெண்ணை அங்கிருந்து அழைத்துச் சென்று, அந்த பகுதியில் ஆட்கள் யாரும் வராத முற்றிலும் ஒரு தனிமையான இடத்தில் விட்டு விட்டு, அந்த 3 பேரும் அங்கிருந்து தப்பித்துச் சென்று விட்டனர். 

இதனால், நீண்ட நேரம் அழுதுகொண்டே இருந்த அந்த பெண், அங்கிருந்து எப்படியோ தனது வீட்டிற்குத் திரும்பி உள்ளார். அந்த பெண்ணின் நிலைமையைப் பார்த்து, பெற்றோர்கள் விசாரித்து உள்ளனர். அப்போது, தனக்கு நேர்ந்த பாலியல் பலாத்காரம் சம்பவம் பற்றி அந்த பெண் அமுதுபடியே எல்லாவற்றையும் கூறி உள்ளார்.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த பெண்ணின் பெற்றோர், சம்மந்தப்பட்ட 3 பேர் மீதும், அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், சம்மந்தப்பட்ட 3 பேரையும் அதிரடியாகக் கைது செய்து, தீவிரமாக விசாரணை மேற்கொண்டு, 3 போரையும் சிறையில் அடைத்தனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.