கல்யாணத்துக்கு பிறகு கடந்த 10 வருடத்தில் 25 ஆண்களுடன் ஓடிப்போன மனைவியை காதல் மனைவியை, அவரது கணவன் இன்றும் நேசிக்கும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

“மருதமலை” படத்தில் நடிகர் வடிவேலு நடித்த ஒரு நகைச்சுவைக் காட்சி போல் அசாம் மாநில்தில் ஒரு பரபரப்பு சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

“மருதமலை” படத்தில், “நடிகர் வடிவேலு, காவல் நிலையத்தில் ஏட்டாக இருக்கும் போது, ஒரு பெண்ணை 4 பேர் போலீஸ் ஸ்டேஷன் கூட்டி வந்து 'இவ என் பொண்டாட்டி, என் கூட அனுப்பி வைங்கன்னு' 4 பேரும் புகார் கொடுப்பாங்க. 

இந்த வழக்கை நடிகர் வடிவேலு விசாரித்துக்கொண்டு இருக்கும் போது, கடைசியா ஒருந்தன் வந்து, “நான் தான் தாலிக்கட்டுன ஒரிஜினல் புருசன்னு” சொல்லி கூட்டிக்கிட்டு போவான். அந்த மாதிரிதான், அசாம் மாநில்தில் தற்போது உண்மையாகவே ஒரு சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

அதாவது, மத்திய அசாமின் திங் லாகர் கிராமத்தைச் சேர்ந்த 40 வயதான பெண்ணிற்குக் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பாக திருமணம் ஆகிறது. 

இந்த பெண்ணின் கணவ, அந்த பகுதியில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். மிகவும் பின் தங்கிய கிராமத்தில் வசித்து வரும் இந்த தம்பதிகள், கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பே காதலித்து தான் திருமணம் செய்திருக்கிறர்கள்.

இந்த தம்பதிக்கு தற்போது 3 குழந்தைகள் உள்ளன.

இந்த நிலையில் தான், திருமணமான இந்த 11 ஆண்டுகளில் அந்த 40 வயதான மனைவி, 25 முறை வீட்டை விட்டு வெவ்வேறு நபர்களுடன் ஓடிப்போய் இருக்கிறார்.

“ஒவ்வொரு முறையும் வீட்டை விட்டு ஓடும் போது, அந்த பெண் வெவ்வேறு ஆண்களுடன் சென்றாலும், அடுத்த சில மாதங்களில் வீடு திரும்பிவிடுவார்” என்றே அவரது அப்பாவி கணவன் கூறுகிறார். 

ஆனால், “இந்த முறை வீட்டில் இருந்து 22 ஆயிரம் ரூபாயுடனும், வீட்டில் இருந்து சில பொருள்களை எடுத்துக்கொண்டு தனது மனைவி சென்றுள்ளதால், என் மனைவி எப்போது திரும்பி வருவார் என்று தெரியவில்லை” என்று, அப்பாவியாகக் கூறுகிறார் அவரது அப்பாவி காதல் கணவன்.

“இப்படியாக, ஒவ்வொரு முறையும் தனது மனைவி வீட்டிற்குத் திரும்பி வரும்போதெல்லாம், 'நான் இனி மேல் யாருடனும் ஓட மாட்டேன். இனி இந்த தவற்றை மீண்டும் செய்ய மாட்டேன்” என்று கூறி தனது கணவனை நம்ப வைத்திருக்கிறார். 

ஆனால், “எனது மனைவி தனது சத்தியத்தை ஒரு முறை கூட காப்பாற்றவில்லை” என்றும், அவரது கணவன் கூறுகிறார்.