கல்யாணம் செய்து கொள்ளாமல் லிவிங் டூ கெதர் வாழ்க்கையில் வாழ்ந்து வந்த காதல் ஜோடிக்குள் பிரச்சனை ஏற்பட்டதில், காதலனை அவரது காதலியே அடித்து கொலை செய்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

மகாராஷ்டிரா மாநிலம் புனேவி்ல் உள்ள ஹடப்சரில் வசிக்கும் 20 வயதான இளம் பெண் ரோஹிணி யானுட் என்பவர், அரசு போட்டித் தேர்வுக்காகத் தன்னை தயார்

படுத்திக்கொண்டு வந்தார். இது தொடர்பாக அந்த பகுதியில் உள்ள தனியார் கோச்சிங் சென்டரில் சேர்ந்து பயின்று வந்தார்.

அதே போல், அதே பகுதியைச் சேர்ந்த 25 வயதான யானுட் சோனல் என்ற இளைஞரும், அரசு போட்டித் தேர்வுக்காகத் தன்னை தயார் படுத்திக்கொண்டு வந்தார்.

இப்படி, இருவரும் தனித் தனியாக அரசு போட்டித் தேர்வு தங்களை தயார்ப்படுத்திக்கொண்ட போது, இருவருக்குள்ளும் அறிமுகம் ஏற்பட்டு உள்ளது.

இவர்களது அறிமுகம், அடுத்த சில நாட்களிலேயே அவர்களுக்குள் காதலை வளர்த்திருக்கிறார். இதனால், இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர்.

ஆனால், காதலர்கள் இருவரும், அந்த பகுதியில் உள்ள வேறு வேறு தனியார் நிறுவனங்களில் வேலை பார்த்து வந்தனர். எனினும், வேலை பார்க்கும் நேரம் போக மீதமுள்ள நேரத்தில் அவர்கள் இருவரும் அரசுத் தேர்வுக்காகப் படித்து வந்தனர்.

இப்படியான சூழ்நிலையில் தான், காதலர்கள் இருவரும், கல்யாணம் செய்து கொள்ளாமல் லிவிங் டூ கெதர் லைப்பில் ஒன்றாக ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்ந்து வந்தனர்.

ஆனால், காலர்கள் இருவரும் ஒன்றாகச் சேர்ந்து வாழத் தொடங்கியது முதல்> அவர்களுக்குள் அடிக்கடி கருத்து வேறுபாடு காரணமாகப் பிரச்சனை எழுந்துகொண்டே இருந்திருக்கிறது.

இப்படியாக, அவர்களுக்குள் தொடர்ந்து பிரச்சனை எழுந்த நிலையில், கடந்த ஆகஸ்டு 29 ஆம் தேதி அன்று, காதலர்கள் இருவருக்குள்ளும் மீண்டும் பிரச்சனை எழுந்து, சண்டை வந்துள்ளது.

அப்போது, கடும் கோபம் அடைந்த அந்த காதலி, தனது காதலனை அடித்தே கொலை செய்து உள்ளார். காதலி தாக்கியதில், படுகாயங்களுடன் கீழே சரிந்த அந்த காதலன், பரிதாபமாக உயிரிழந்து உள்ளார்.

இதனையடுத்து, “தனது காதலன் இயற்கையாகவே இறந்து விட்டதாக” உறவினர்களிடம் கூறியுள்ளார். ஆனால், இதனை நம்பாத உறவினர்கள், அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இது குறித்து விரைந்து வந்த போலீசார், உயிரிழ்தவரின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து பிரேதப் பரிசோதனை அறிக்கை வெளி வந்த நிலையில், “அந்த காதலன் அடித்தே கொலை செய்யப்பட்டது” தெரிய வந்தது.

அத்துடன், அந்த பெண் காதலன் சோனலின் இறப்புக்கான காரணத்தை, அந்த இளைஞனின் உறவினர்களுக்கோ அல்லது போலீசாருக்கோ தெரிவிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதனையடுத்து, காதலனை அடித்தே கொலை செய்த வழக்கில், அந்த காதலியை போலீசார் கைது செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.