“20 ஓவர் உலக கோப்பை தொடருக்குப் பிறகு கேப்டன் பதவியிலிருந்து விலக” விராட் கோலி முடிவு செய்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

33 வயதாகவும் விராட் கோலி, உலகின் முன்னணி பேட்ஸ் மேன்களில் ஒருவராகத் திகழ்ந்து வருகிறார்.

இந்திய கிரிக்கெட் அணியின் அனைத்து வடிவிலான போட்டிகளுக்கும் விராட் கோலி, கேப்டனாக இருந்து வருகிறார். இப்படியாக, 3 வடிவிலான போட்டிகளுக்கும் கோலி கேப்டனாக இருப்பதால், அதனால் ஏற்பட்டு இருக்கும் பணிச் சுமையை குறைக்கும் வண்ணம் விராட் கோலிக்கு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் தான், “20 ஓவர் உலக கோப்பை தொடருக்குப் பிறகு, ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பொறுப்பிலிருந்து விலக இருப்பதாக” தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.

அதற்கு முக்கிய காரணமாக, “தன்னுடைய பேட்டிங்கில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்” என்ற நோக்கத்தில் விராட் கோலி, இந்த முடிவு எடுத்திருப்பதாகவும்” தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதன் காரணமாக, “ஒரு நாள் போட்டிக்கான கேப்டன் பொறுப்பு தற்போது துணை கேப்டனாக இருக்கும் ரோகித் சர்மாவுக்கு வழங்கப்பட இருப்பதாகவும்” பிசிசிஐ வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.

அதே போல், “டெஸ்ட் அணிக்கு விராட் கோலியையும், ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளுக்கு ரோகித் சர்மாவை கேப்டனாக்கலாம் என்ற முடிவை பிசிசிஐ எடுத்துள்ளதாகவும்” தகவல்கள் வெளியாகி உள்ளன.

அத்துடன், “டெஸ்ட் மற்றும் டி20  போட்டிகளுக்கான கேப்டன் பொறுப்பில் விராட் கோலி தொடர்ந்து நீடிப்பார்” என்றும் கூறப்படுகிறது.

“அக்டோபர் - நவம்பர் மாதத்தில் நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பை தொடருக்குப் பிறகு, தன்னுடைய பதவி விலகல் முடிவை” விராட் கோலி அறிவிக்க இருப்பதாகவும், செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்திய அணியானது, விராட் கோலி தலைமையில் இது வரை 95 போட்டிகளில் விளையாடி 65 போட்டிகளில் வெற்றியும், 27 போட்டிகளில் தோல்வியும் கண்டிருக்கிறது. ஒரு போட்டி டிராவில் முடிந்திருக்கிறது. இதில், 2 போட்டிகளில் முடிவு எதுவும் எட்டப்படவில்லை.