தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகரான தல அஜித் குமார் நடிப்பில் அடுத்து வெளிவர உள்ள திரைப்படம் வலிமை. தயாரிப்பாளர் போனி கபூரின் பே வியூ ப்ராஜெக்ட்ஸ் மற்றும் ஜி ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்திருக்கும் வலிமை திரைப்படத்தை இயக்குனர் H.வினோத் எழுதி இயக்குகிறார். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க ஒளிப்பதிவாளர் நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். 

தல அஜித்துக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி கதாநாயகியாக நடிக்க பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திக்கேயா மிரட்டலான வில்லனாக நடித்திருக்கிறார். மேலும் யோகி பாபு, விஜய் டிவி புகழ், சுமித்ரா, பாவல் நவகீதன் உள்ளிட்ட பலர் வலிவை திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

சமீபத்தில் வெளியான மோஷன் போஸ்டர் & நாங்க வேற மாரி பாடலும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.இதனையடுத்து விரைவில் வலிமை படத்தின் டீசர் , டிரைலர் மற்றும் ரிலீஸ் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பிரபல நடிகர் தல அஜித்துக்கு புகழாரம் சூட்டியுள்ளார். 

இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடித்த அறிந்தும் அறியாமலும் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த நடிகர் நவதீப் தொடர்ந்து தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். தல அஜித்துடன் இணைந்து பைக் ரைடிங் செய்த நடிகர் நவ்தீப் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், மிகவும் தூய்மையான அன்பு கொண்ட இவரது குரலில் “ஹாய்” என கேட்பது மகிழ்ச்சியாக இருக்கிறது... நீண்ட வருடங்களுக்கு பிறகு இவரை காணும் போதும் அதே எளிமையோடு இருக்கிறார்... உண்மையிலேயே அற்புதமான மனிதர் இவர்... அதனால் தான் இவர் எப்போதும் தல என தெரிவித்துள்ளார். மேலும் தல அஜித்துடன் நவதீப் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன அந்த புகைப்படங்கள் இதோ...