லாக்கப்புக்குள் சென்ற பெண் போலீசாரிடம், கைதி ஒருவர் நிர்வாணமாக நின்று கலாட்டா செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குஜராத் மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

குஜராத் மாநிலம் சூரத்தில் இருக்கும் சலாபத்புரா பகுதியில் உள்ள தலோதரா கிராமத்தைச் சேர்ந்த 55 வயதான சுரேஷ் நந்த்வானி என்ற நபர், பொது இடத்தில் குடித்து விட்டு தகராறு செய்திருக்கிறார்.

அந்த நேரத்தில், அந்த பகுதியில் ரோந்து சென்ற போலீசார், அவரை கண்டித்து உள்ளனர். அப்போது, அவர் அந்த காவல் துறையினரிடம் தகராறு செய்திருக்கிறார். இதனால், போலீசார் அவரை அப்போது கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.

காவல் நிலையம் சென்றதும், அவரிடம் சில தகவல்களை கேட்டு விட்டு, அந்த நபரை சலாபத்புரா பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் இருக்கும் லாக்கப்பில் சிறையில் அடைத்தனர்.

அப்போது, சிறையில் அடைக்கப்பட்ட அந்த நபர், லாக்கப்பின் உள்ளே வன்முறையில் ஈடுபட்டு இருக்கிறார்.

அப்போது, அந்த நபரை அடக்குவதற்காக சில பெண் போலீசார், அந்த லாக்கப்பின் உள்ளே வந்திருக்கிறார்கள். 

அந்த நேரத்தில், யாரும் எதிர்பார்க்காத வண்ணம், அந்த போதை ஆசாமி, தன்னுடைய உடைகளைக் கண் இமைக்கும் நேரத்தில் களைந்து விட்டு, அந்த பெண் போலீசாரின் முன்பு திடீரென்று நிர்வாணமாக நின்று, மீண்டும் கலாட்டா செய்திருக்கிறார்.

இதை சற்றும் எதிர் பார்க்காத அந்த பெண் போலீசார், அவரிடம் ஆடைகளை கொடுத்து அணிய சொல்லி வற்புறுத்தியிருக்கிறார்கள். 

ஆனால், அந்த நபர் ஆடைகளை அணியாமல், மீண்டும் அந்த பெண் போலீசாரிடம் தகராறில் ஈடுபட்டு இருக்கிறார். 

அத்துடன், லாக் அப்புக்குள் கலாட்டா செய்து, பெண் போலீசாரை ஆபாசமாகத் திட்டி தீர்த்து உள்ளார்.

அந்த தருணத்தில், அங்கு வந்த போலீஸ் உயர் அதிகாரிகள், அவரை அடித்து உதைத்து லாக்கப்பில் உடையணிந்து பூட்டி வைத்ததாகவும் கூறப்படுகிறது. 

இதனையடுத்து, அந்த நபர் மீது பாலியல் கொடுமை வழக்கை போலீசார் பதிவு செய்து, அவரை சிறையில் அடைத்தனர். இதனால், காவல் நிலையம் அமைந்துள்ள பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.