ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து கருக்கலைப்பு செய்த கொடூரனை, பாதிக்கப்பட்ட இளம் பெண் கொலை முயன்றதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஹரியானா மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்திருக்கிறது.

ஹரியானா மாநிலம் குருகிராம் பகுதியைச் சேர்ந்த 26 வயதான இளம் பெண் ஒருவர், அங்குள்ள செக்டர் 52 இல் செயல்பட்டு வரும் ஒரு ஆய்வகத்தில், ஆய்வக தொழில் நுட்பவியலாளராகப் பணியாற்றி வருகிறார்.

அந்த ஆய்வகத்தினை சச்சின் சிங் திவாரி என்பவர், சொந்தமாக நடத்தி வருகிறார்.

இப்படியான நிலையில், தினந்தோறும் பணிக்கு வரும் அந்த இளம் பெண், ஆய்வகத்தில் தனது ஆடைகளை மாற்றிவிட்டு அந்த பணிக்குரிய ஆடையை உடுத்திக்கொள்வது வழக்கம்.

அப்படி, ஒரு நாள் அந்த இளம் பெண் ஆடை மாற்றுவதை மறைந்திருந்து அதனை தனது செல்போனில் அந்த ஆய்வகத்தின் ஓனர் திவாரி, ரகசியமாக வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு உள்ளார்.

அதன் பிறகு, அந்த வீடியோவை அந்த இளம் பெண்ணிடம் காண்பித்து, “இதனை நான் சமூக ஊடகங்களில் வெளியிடப்போகிறேன்” என்று, மிரட்டி உள்ளார்.

அவரின் மிரட்டலுக்கு அடிபணிந்த அந்த பெண், அவரிடம் தனது கற்பை இழந்திருக்கிறார்.

இப்படியாக, அந்த இளம் பெண்ணின் பயத்தை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட அந்த நபர், அந்த இளம் பெண் தொடர்ச்சியாகப் பல முறை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்.

இதனையடுத்து, அந்த இளம் பெண்ணை மிரட்டிய அவர், அங்குள்ள ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று, அவரை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்.

இதன் காரணமாக, அந்தப் பெண் ஒரு முறை கர்ப்பம் தரித்திருக்கிறார். இதனால், அதிர்ச்சியடைந்த அந்த பெண், தனது நிலையை நினைத்து நொந்துகொண்ட நிலையில், அந்த கொடூரனிடம் இது குறித்து புலம்பி அழுதுள்ளார்.

இதனையடுத்து, அந்த இளம் பெண்ணுக்கு அந்த நபர், கருக்கலைப்பும் செய்திருக்கிறார்.

அதன் தொடர்ச்சியாக, அந்த பெண்ணை ஒரு நாள் தன்னுடைய காரில் அழைத்துச் சென்று உள்ளார். அப்போது, கடும் போதையில் இருந்த அவர், அந்த பெண்ணை காருக்குள்ளயே வைத்து பலாத்காரம் செய்ய முயன்றிருக்கிறார். இதனால், கடும் கோபம் அடைந்து பொறுமையை இழந்த அந்த இளம் பெண், கத்தியால் அந்த நபரை கொலை செய்ய முயன்றுள்ளார்.

இதனால், நிலை தடுமாறிய அந்த கார், அங்கு தட்டு தடுமாறி அங்குள்ள ஒரு இடத்தில் அப்படியே நின்றுள்ளது. இதனால், அங்கு பொது மக்கள் கூடி உள்ளனர். அப்போது, காரை விட்டு இறங்கிய அந்த பெண், தனக்கு நேரும் பாலியல் கொடுமைகள் குறித்து அந்த கூறி, கதறி  அழுதிருக்கிறார்.

இதனையடுத்து, அந்த நபரிடமிருந்து அந்த பெண்ணை மீட்ட பொது மக்கள், அங்குள்ள காவல் நிலையத்தில் அந்த பெண்ணை அழைத்துச் சென்று கொடூரன் திவாரி மீது புகார் அளித்தனர்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், திவாரியை கைது செய்ய முயன்றனர். ஆனால், அதற்குள் அவர் தப்பித்துத்  தலைமறைவாகி விட்டதாகக் கூறப்படுகிறது. எனினும் போலீசார் அவரை தொடர்ந்து தேடி வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.