இந்திய சினிமாவில் அதிரடி ஆக்ஷன் கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் வித்யூத் ஜமால் தெலுங்கு சினிமாவில் வில்லன் நடிகராக அறிமுகமானார். முதலில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான காக்க காக்க படத்தின் பாலிவுட் ரீமேக்காக உருவான ஃபோர்ஸ் திரைப்படத்தில் வில்லனாக நடித்து இந்திய அளவில் மிகுந்த பிரபலம் அடைந்தார்.

தொடர்ந்து தமிழில் தல அஜித் குமார் நடித்த பில்லா 2 மற்றும் தளபதி விஜய் நடித்த துப்பாக்கி உள்ளிட்ட படங்களிலும் வில்லனாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அந்த இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடித்த அஞ்சான் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் வித்யூத் ஜமால் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வில்லன் நடிகராக மட்டுமல்லாமல் ஹீரோவாகவும் பாலிவுட் சினிமாவில் கலக்கி வரும் நடிகர் வித்யூத் ஜமால் கமாண்டோ திரைப்படத்தின் மூலம் முதல்முறை அதிரடி ஆக்சன் ஹீரோவாக களம் இறங்கினார். கமாண்டோ 2, கமெண்டோ 3, ஜங்கிள் என ஆக்ஷன் கதை களங்களை தேர்ந்தெடுத்து தனது மார்ஷியல் ஆர்ட்ஸ் மற்றும் ஆக்சன் காட்சிகளால் ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.

இந்நிலையில் நடிகர் வித்யூத் ஜமால் தனது திருமணம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்தியாவின் பிரபல ஆடை வடிவமைப்பாளரான நந்திதா மட்டனியை நடிகர் வித்யூத் ஜமால் திருமணம் செய்து கொள்ளப் போகிறார். கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி இவர்கள் இருவரும் தாஜ்மஹாலுக்கு சென்று இந்த புகைப்படத்தை பகிர்ந்து இதனை இருவரும் தெரிவித்துள்ளனர். விரைவில் நடக்கவிருக்கும் நடிகர் வித்யூத் ஜமால் மற்றும் நந்திதா மட்டனியின் திருமணத்திற்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.