கணவனின் அந்தரங்க உறுப்பை அறுத்து அதனை எண்ணெய் சட்டியில் போட்டு மனைவி சமைத்து சாப்பிட்ட முயன்ற சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பிரேசில் நாட்டில் தான் சினிமாவில் வருவது போன்ற இப்படி ஒரு கொடூரமான சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

பிரேசில் சாட்டில் உன்ன ரியோ டி ஜெனீரோ நகரில் அமைந்துள்ள ஒரு அபார்மெண்டில் 33 வயதான டயானா கிறிஸ்டினா ரோட்ரிகஸ் மசாடோ என்ற பெண், தனது கணவர் கிறிஸ்டினா ஸாவோ என்பவருடன் வசித்து வந்தார். 

இந்த தம்பதிக்குக் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து உள்ளது. திருமணத்திற்குப் பிறகு, கணவன் - மனைவி இருவருமே சந்தோசமாக வாழ்க்கை நடத்தி வந்துள்ளனர்.

ஆனால், அதன் பிறகு கணவன் - மனைவி இருவருக்கும் தொடர்ச்சியாக கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு, எலியும் பூனையுமாக மாறிப்போனார்கள். இதனால், கணவன் - மனைவிக்குள் அன்றாடம் சண்டை வந்துகொண்டே இருந்து உள்ளது. 

ஆனாலும், இந்த தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ளனர். அதன் படி, 8 வயதில் ஒரு மகனும், 5 வயதில் ஒரு மகளும் இந்த தம்பதிக்கு உள்ளனர். எனினும், தம்பதிகள் இடையே சண்டை குறைந்தபாடு இல்லை. 

ஒரு கட்டத்தில் கணவன் - மனைவி இடையேயான சண்டை வழக்கத்தை விட சற்று அதிகரித்த நிலையில், ஒரு கட்டத்தில் இதற்கு மேலும் பொறுத்துக்கொள்ள முடியாத அவரின் மனைவி டயானா, கணவனிடம் இருந்து பிரிந்து சென்று, கடந்த 2 ஆண்டுகளாகத் தனியாக வசித்து வந்தார்.

இப்படியாக, 2 ஆண்டுகள் சென்ற பிறகு, கோபித்துக்கொண்டு சென்ற மனைவியைச் சமாதானம் செய்த கணவன், மறுபடியும் வீட்டிற்கு அழைத்து வந்து குடும்பம் நடத்தி உள்ளார்.

இப்படியான நிலையில், கணவன் - மனைவி இருவருக்கும் இடையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் சண்டை வந்து உள்ளது. அப்போது, மனைவி டயானாவை அவரது கணவர் மிக கடுமையாகத் தாக்கி உள்ளார்.

அப்போதும் கடும் கோபம் அடைந்த அவர் மனைவி டயானா, தற்பாதுகாப்புக்காகக் கத்தியை எடுத்து உள்ளார். இதனைப் பார்த்து இன்னும் கோபம் அடைந்த அந்த பெண்ணின் கணவன், மீண்டும் மனைவியை தாக்கத் தொடங்க இருவருக்கும் இடையே சண்டை இன்னும் அதிகரித்து உள்ளது.

அப்போது, இதற்கு மேலும் பொறுத்துக்கொள்ள முடியாத டயானா, கணவரை கத்தியால் குத்தி உள்ளார். அப்போது இன்னும் ஆத்திரம் தாங்காமல் ஆவேசப்பட்ட டயானா, கணவனின் அந்தரங்க உறுப்பைத் தனியாக வெட்டி எடுத்து, சட்டியில் போட்டு எண்ணெய் விட்டு வறுத்து உள்ளார்.

அப்போது, அந்த வீட்டில் சண்டை பெரிதானதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர், அந்நாட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்து உள்ளனர். இது குறித்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உடல் முழுக்க ரத்த காயங்களுடன் சடலமாக கிடந்த கிறிஸ்டினா உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

அத்துடன், கணவனின் அந்தரங்க உறுப்பைத் தனியாக வெட்டி எடுத்து, சட்டியில் போட்டு எண்ணெய் விட்டு வறுத்துக்கொண்டிருந்த சைக்கோ மனைவியை அதிரடியாகக் கைது செய்தனர்.

மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தினார்கள். ஆனால், அவர் எதுவும் பேசாமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால், போலீசாருக்கு கொலைக்கான காரணம் இன்னும் முழுமையாகத் தெரியவில்லை என்று கூறப்படுகிறது. இச்சம்பவம், அந்நாட்டில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.