கொரோனா லாக்டவுன் காலத்தில் அதிகமான இளசுகள் ஆபாசப் படம் பார்ப்பதாக தகவல்கள் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இங்கிலாந்து நாட்டில் உள்ள இளைஞர்களில் சரிபாதி பேர் Porn எனப்படும் ஆபாசப் படங்களை பார்த்திருப்பது ஆய்வில் தெரியவந்து உள்ளது.

கொரோனா வைரஸ் என்னும் பெருந் தொற்று, உலகம் முழுவதும் கடந்த ஆண்டு முதல் பரவிக்கொண்டு இருக்கிறது. இந்த கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் நோக்கில் பல உலக நாடுகள் மிக கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வந்தது.

அதன் படி, இங்கிலாந்து நாட்டில் கடந்த ஆண்டு பரவி வந்த கொரோனாவை வைரசை கட்டுப்படுத்த, அந்த நாட்டிலும் மிக கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. 

அந்த நேரத்தில், வீட்டிற்குள்ளேயே முடங்கி இருந்த இளைஞர்கள் மற்றும் இளம் வயதுடைய பலரும் வீடியோ கேம் மற்றும் இணைய தளங்களிலேயே பெரும்பாலும் தஞ்சம் அடைந்து போனார்கள்.

இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட அந்நாட்டைச் சேர்ந்த மீடியா ரெகுலேட்டர் அப்காம் என்ற நிறுவனம், இது தொடர்பான ஆய்வு முடிவுகளை வெளியிட்டு உள்ளது. அந்த ஆய்வின் படி, “இங்கிலாந்தில் இருக்கும் இளைஞர்களில் சரிபாதி பேர், ஆபாசப் படங்கள் பார்க்கும் Porn வெப்சைட்கள் மற்றும் செயலிகளை உபயோகித்துள்ளதாக” குறிப்பிட்டு உள்ளது. 

அதாவது, “கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மட்டும், இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த சுமார் 26 மில்லியன் பேர் ஆபாசப் தளமான Porn வெப்சைட்கள் மற்றும் செயலிகளைப் பார்த்து உள்ளனர்” என்று, சுட்டிக்காட்டி உள்ளது. 

“இந்த வீடியோவை பார்ப்பவர்களில் நான்கில் 3 பகுதியினர் பருவ வயது இளைஞர்கள் மற்றும், இளம் வயதைக் கொண்டவர்கள்” என்றும், தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

இந்த புள்ளி விவரத்தின் அடிப்படையில் கணக்கிடும்போது, “இங்கிலாந்தில் இருக்கும் இளைஞர்களில் சரிபாதி பேர் அந்தப் படங்களைப் பார்த்து உள்ளது, இதன் மூலமாகத் தெரிய வந்துள்ளது என்றும், இளைஞர்கள் மட்டுமே அந்தப் படங்கள் இருக்கும் தளங்களையும், செயலிகளையும் உபயோகப்படுத்தவில்லை என்றும், பல பெண்களும் இந்த தளத்திற்கு சென்று ஆபாச படங்களை பார்த்து உள்ளனர்” என்றும், அந்த நிறுவனம் சுட்டிக்காட்டி உள்ளது.

குறிப்பாக, “16 விழுக்காடு இங்கிலாந்து பெண்கள் ஆபாசப் பட தளமான Porn வெப்சைட் மற்றும் செயலிகளுக்கு சென்று, அவற்றை பார்த்து ரசித்து உள்ளனர்” என்றும், மீடியா ரெகுலேட்டர் அப்காம் நிறுவனம், கூறியுள்ளது.

அதே போல், “சராசரியாக ஒருவர் நாள்ளொன்றுக்கு ஆன்லைன் பயன்படுத்தும் விகிதம் 3 மணி நேரம் 37 நிமிடங்களாக கடந்த 2019 ஆம் ஆண்டு இருந்தது” என்றும், அந்நிறுவனம் சுட்டிக்காட்டி உள்ளது.

முக்கியமாக, “இளம் வயதினர் டிக்டாக் செயலியை அதிகமாக உபயோகப்படுத்துகின்றனர்” என்றும், மீடியா ரெகுலேட்டர் அப்காம் நிறுவனம் தெரிவித்து உள்ளது.