2 குழந்தைகளின் தாய் மது விருந்துக்குச் சென்றதால், 4 நாட்களாக உணவின்றி தவித்த 11 மாத குழந்தை உயிரிழந்த நிலையில், 3 வயது குழந்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தாய் என்பவள் கடவுளுக்கு நிகரானவன். அதனால் தான், தாயை எல்லோரும் எல்லா நிலைகளிலும் நாம் கொண்டாடிக்கொண்டு இருக்கிறோம். ஆனால், “ஒரு தாய் மது போதைக்கு அடிமையாகி, தான் பெற்ற குழந்தையின் உயிரிழப்பிற்குக் காரணமாக இருக்கிறாள் என்றால், நம்ப முடிகிறதா? ஆம், நம்பித் தான் ஆக வேண்டும். ரஷ்யாவில் தான் இப்படி ஒரு பேரதிர்ச்சியான சம்பவம் ஒன்று அரங்கேறி இருக்கிறது.

ரஷ்யா நாட்டில் மாஸ்கோ நகரில் உள்ள ஜ்லோடாஸ்ட் என்னும் பகுதியைச் சேர்ந்த 25 வயதான வோல்கா பஜிராவோ என்ற இளம் பெண், ஏற்கனவே திருமணம் ஆகி இரண்டு குழந்தைகளுக்குத் தாயான இளம் தாயாக இருக்கிறார். ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக, தனது கணவரைப் பிரிந்து அந்த இளம் தாய், தனது இரு குழந்தைகளுடன் அங்கு தனியாக வசித்து வந்தார். 

இந்த 25 வயதான இளம் தாய்க்கு 11 மாத மகனும், 3 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இப்படி, தனது இரு பிள்ளைகளுடன் தனிமையில் அந்த தாய் வாழ்ந்துகொண்டு வந்த நிலையில், கடந்த 4 நாட்களுக்கு முன்பு, தனது நண்பர்களுடன் மதுவிருந்துக்கு செல்லும் மோகத்தில், தனது 11 மாத குழந்தையையும், 3 வயது மகளையும் தன்னுடைய வீட்டிலேயே பூட்டிவிட்டுச் சென்றிருக்கிறார்.

இதனால், அந்த 3 வயது குழந்தையும் சரி, அந்த 11 மாத கை குழந்தையும் சரி பசியால் அழுது அழுது 4 நாட்களாக ஓய்ந்து போய் உள்ளனர். பசித்தால் என்ன சாப்பிட வேண்டும் என்று, அந்த 3 வயது குழந்தைக்கே தெரியாத நிலையில், அந்த 11 மாத கைகுழந்தைக்கு மட்டும் என்ன தெரிந்துவிடப் போகிறது.

இப்படி, பசியால் அழுது துடித்த அந்த 11 மாத கை குழந்தை, அழுது அழுது ஒரு கட்டத்தில் தன் உயிரையே விட்டு விட்டது. தாயின் மதுபான மோகத்தில், அந்த சின்னஞ்சிறு பச்சிளம் குழந்தை, தனது உயிரை விட்டுவிட்டது.

அத்துடன், வீட்டில் இருந்த 3 வயது குழந்தையும், பசியால் அழுது அழுது முகமெல்லாம் வாடிப்போய் அப்படியே மயங்கிவிட்டாள். உயிருக்கு ஆபாத்தான நிலையில், அந்த வீட்டில் உயிரை மட்டும் கையில் பிடித்துக்கொண்டு மயங்கிய நிலையில் கிடந்து உள்ளார்.

நண்பர்களுடன் மது விருந்திற்குச் சென்ற அந்த தாய், 4 நாட்களுக்குப் பிறகு, தனது வீட்டிற்குள் வந்து பார்த்து உள்ளார். அப்போது, பசியால் 11 மாத குழந்தை உயிரிழந்து கிடப்பதைக் கண்டு கடும் அதிர்ச்சி அடைந்து உள்ளார். 

மேலும், உயிருக்கு ஆபத்தான நிலையிலிருந்த 3 வயது மகளும் கிழிப்பதைப் பார்த்த அவர், அவசர அவசரமாக அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து உள்ளார். அங்கு, அந்த 3 வயது குழந்தை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக குழந்தைகளின் பாட்டி அந்நாட்டின் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த அந்நாட்டு போலீசார், அந்த இளம் தாய் வோல்காவை அதிரடியாகக் கைது செய்தனர். 

பின்னர், அந்த தாய் அந்நாட்டின் நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்டார். அப்போது, “தான் பெற்ற குழந்தைகளைக் கவனிக்கத் தவறிய குற்றத்திற்காகவும், தன் கடமையைச் செய்யத் தவறியதற்காகவும், வோல்காவுக்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து” அந்நாட்டு நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது. இதனையடுத்து, அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இச்சம்பவம், அந்நாட்டில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.