தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் தயாரிப்பாளராகவும் இருக்கும் நடிகர் விஷால் நடித்து கடைசியாக வெளிவந்த திரைப்படம் சக்ரா. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற  சக்ரா திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் து.பா.சரவணன் இயக்கும் புதிய திரைப்படமான விஷால் 31 திரைப்படத்தில் நடித்து வருகிறார். முன்னதாக இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவாகிவரும் துப்பறிவாளன் 2 திரைப்படத்தின் மூலம் இயக்குனராகவும் அவதாரம் எடுத்திருக்கிறார் நடிகர் விஷால்.

மேலும் அரிமா நம்பி, இருமுகன் திரைப்படத்தின் இயக்குனர் ஆனந்த் சங்கர் இயக்கும் புதிய திரைப்படமான எனிமி திரைப்படத்தில் நடிகர் விஷால் கதாநாயகனாக நடிக்க நடிகர் ஆர்யா வில்லனாக நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குனர் து.பா.சரவணன் இயக்கும் புதிய திரைப்படமான விஷால் 31 நாட் எ காமன் மேன் திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.நடிகர் பிரபுதேவா நடித்த தேவி 2 திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான டிம்பிள் ஹயாட்டி விஷால் 31 படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.  

இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு படப்பிடிப்புகள் தடைபட்டது. தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் மீண்டும் படப்பிடிப்புகள் துவங்கப்பட்டுள்ளன.தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து விஷால் 31 திரைப்படத்தின் படப்பிடிப்புகள் ஐதராபாத்தில் நேற்று துவங்கியுள்ளது. மீண்டும் விஷால் 31 திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட்டது குறித்து விஷால் ஃபிலிம் ஃபேக்டரி பிக்சர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அந்தப் பதிவில் “மீண்டும் விஷால் 31 படப்பிடிப்பு ஹைதராபாத்தில் துவங்கியுள்ளது. ஜூலை மாத இறுதி வரை படப்பிடிப்பு நடைபெற உள்ளது. அனுமதிக்கப்பட்ட அனைத்து விதிமுறைகள் ஓடு பாதுகாப்பாக படப்பிடிப்பு நடைபெறுகிறது மீண்டும் படப்பிடிப்பு துவங்கியது மகிழ்ச்சி அளிக்கிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பின் போது படமாக்கப்பட்ட ஆக்சன் காட்சிகளின் சிறிய படப்பிடிப்பு வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.