மனித குலத்தையே ஆட்டி வைத்த கொரோனா இப்போது அண்டார்டிகாவிலும் பரவி இருக்கிறது. அண்டார்டிகாவில் இருக்கும் சிலி நாட்டு ராணுவ முகாம்களில் 58 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்கிறது . துருவப் பிரதேசம் வரை கொரோனா பரவி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


.லாஸ் எஸ்ட்ரில்லாஸ் கிராமத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட, அங்கு பரமாரிப்புக்காக இட்டுச் செல்லப்பட்ட ஊழியர்கள் 10 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.  சார்ஜண்ட் ஆல்டியா கப்பலில் கடந்த வாரம் முதலில் 3 பேருக்கு ஏற்பட கொரோனாவால் 208 ஊழியர்களும் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார்.


ஆனால் அண்டார்டிகாவில் மற்ற நாடுகளின் இராணுவ முகாமில் இருப்பவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை. மேலும் பாதிக்கப்பட்டவர்களில் யாருக்கும்  தீவிர பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை.  கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்கும் சார்ஜண்ட் ஆல்டியா கப்பலில் பயணிகளுக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அண்டார்காவின் அமெரிக்க தேசிய அறிவியல் ஃபவுண்டேஷன் தெரிவித்துள்ளது.