உலகிலேயே முதன் முறையாக ஆண் ஒருவர் கர்ப்பமடைந்து உள்ள சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

உலக வல்லரசான அமெரிக்கா நாட்டில் தான், இப்படி ஒரு அதிசய சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

அமெரிக்காவைச் சேர்ந்த 18 வயது இளைஞரான மைக்கி சானல் என்பவருக்கு சில காலமாகவே சிறுநீர் கழிக்கும் போதெல்லாம் அடிக்கடி வலி வந்திருக்கிறது. தொடக்கத்தில், இந்த வலியை அவர் பெருத்துப்படுத்தாமல் இருந்து வந்து உள்ளார். ஆனால், நாட்கள் செல்ல செல்ல ஒரு கட்டடத்தில் வலி அதிகமாகி உள்ளது. 

இதனால், பயந்து போன அந்த இளைஞர், அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சென்று உள்ளார். அங்கு, இந்த இளைஞரைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், “ஏதாவது ஒவ்வாமை காரணமாகவோ அல்லது குறிப்பிட்ட சில இடங்களில் கல் இருக்கலாம் என்று நினைத்து பரிசோதனை செய்து பார்த்து உள்ளனர். 

அந்த பரிசோதனையின் முடிவில் அந்த மருத்துவர்களாலேயே நம்ப முடியாத சில அதிசயங்கள் எல்லாம் இருந்து உள்ளன.

அதாவது, அந்த இளைஞருக்கு நடத்தப்பட்ட சோதனையில், அவரது வயிற்றிற்குள் கருப்பை மற்றும் பெண்ணிற்கான அனைத்து இனப் பெருக்க உறுப்புகளும் இருந்து உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த அதிசயமான விஷயத்தை, மருத்துவர்கள் மைக்கி சானலிடம் தெரிவித்து உள்ளனர். ஆனால், முதலில் இதனை நம்ப மறுத்த அந்த இளைஞர், “மருத்துவர்கள் தன்னிடம் விளையாடுவதாக” நினைத்து சரித்துக்கொண்டே அங்கிருந்து கிளம்ப முயன்று உள்ளார்.

அந்த இளைஞனுக்கு இந்த உண்மை தன்மை தெரிய வேண்டும் என்பதற்காக, மருத்துவர்கள் எடுத்த அந்த ஸ்கேன் ரிப்போர்ட்டை, அந்த இளைஞனிடம் காட்டி உள்ளனர். இதனைப் பார்தது, கடும் அதிர்ச்சியில் உரைந்து போன அந்த இளைஞர், பதில் எதுவும் பேச முடியாமல் அப்படியே அங்கேயே அமர்ந்து விட்டார்.

மேலும், “இளைஞர் மைக்கி சானலிடம், “பெண்ணின் இனப்பெருக்க உறுப்புகளை அறுவை சிகிச்சை செய்து அகற்றி விடலாம்” என்று, மருத்துவர்கள் கூறி உள்ளார்கள். ஆனால், அதற்கு அந்த இளைஞனோ “நான் ஆணாக இருந்தாலும், அவ்வப்போது எனது மனதில் நான் ஒரு பெண்ணாக இருப்பேனோ?! என்ற எண்ணம் வந்து செல்கிறது என்றும், இதனால், எனக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டாம்” என்றும், அவர் கூறியுள்ளார்.

அத்துடன், “நான் பெண்ணாக இருப்பது எனக்கு கிடைத்த ஒரு வரம் என்று கூறிய மைக்கி சானல், எனக்குக் குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும் என்றும், தற்போது என்னால் கூட குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பதால் குழந்தை பெற்றுக் கொள்ள நான் விரும்புகிறேன்” என்றும், இளைஞன் மைக்கி சானல் மருத்துவர்களிடம் கூறியுள்ளார். 

அதே நேரத்தில், அவருக்கு பெண்ணுறுப்பு இல்லாத காரணத்தினால் செயற்கை கருவூட்டல் முறையில், அந்த இளைஞர் தற்போது கர்ப்பம் அடைந்து உள்ளார். 

இதன் மூலம், இந்த உலகத்திலேயே கர்ப்பம் அடைந்த முதல் ஆண் என்ற பெருமையை மைக்கி சானல் பெற்று உள்ளார்.

அதே நேரத்தில், “மைக்கி சானலுக்கு பெண்ணுறுப்பு இல்லாத காரணத்தினால், அவருக்கு சிசேரியன் முறையில் மட்டுமே குழந்தை பிறக்கும்” என்றும், மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.

குறிப்பாக, “நான் பெண்ணாக மாறியதால் தற்போது முழுமை அடைந்துள்ளதாகக் கூறியுள்ளதாகவும், பெண்ணாக இருப்பது எவ்வளவு சிறப்பானது என்பதை இப்போது நான் நன்றாகவே உணர்கிறேன்” என்றும், மைக்கி சானல் நெகிழ்ச்சியுடன் கூறியிருக்கிறார்.