திரையுலகில் சிறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை குஷ்பு. அரசியலில் பிஸியாக இருக்கும் குஷ்பு, திரைப்படங்கள் தவிர்த்து சீரியலிலும் கலக்கி வருகிறார். லக்ஷ்மி ஸ்டோர்ஸ் எனும் தொடரில் நடித்தார். திரையில் இவரது நடிப்பிற்கு ஏராளமான ரசிகர்கள் இருப்பது போல், சோஷியல் மீடியாவிலும் தனக்கான ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியிருக்கிறார் குஷ்பு. 

சமூக வலைத்தளங்களில் இருந்து விலகி, சிறிது நாட்கள் ஓய்வு எடுக்கப்போவதாக தெரிவித்திருந்தார். அதன் பிறகு மீண்டும் ஆக்ட்டிவாகி ட்வீட்டுகளை பதிவு செய்து வருகிறார். குஷ்புவின் சமூக அக்கறை மிகுந்த பதிவுகள் இணையவாசிகளை ஈர்த்து வருகிறது. ஒரு புறம் சினிமா என இருந்தாலும், மறுபுறம் அரசியல் பாதையில் அசத்தி வருகிறார். சமீபத்தில் பா.ஜ.க-வில் இணைந்தார் நடிகை குஷ்பு. 

இந்நிலையில் நடிகை குஷ்பு மேல்மருவத்தூர் செல்லும் வழியில் கார் விபத்து ஏற்பட்டுள்ளது. அதிர்ஷ்ட்டவசமாக நடிகை குஷ்புவுக்கு ஏதும் ஆகவில்லை. ஆனால் அவர் பயணித்த வாகனம் சுக்குநூறாக நொறுங்கி கிடக்கிறது. இதுகுறித்து நடிகை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை செய்துள்ளார். அதில் மேல்மருவத்தூர் அருகே டேங்கர் லாரி மோதியதால் கார் விபத்து ஏற்பட்டது. இறைவனின் அருளால் நான் பத்திரமாக உள்ளேன். 

இதைத்தொடர்ந்து கடலூரில் நடக்கும் வேல் யாத்திரைக்கு செல்லவிருக்கிறேன். விபத்து குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். எனது கணவர் கடவுள் முருகன் மேல் வைத்த நம்பிக்கை வீணாகவில்லை என்று பதிவு செய்துள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் பாதுகாப்பாக இருங்கள், மருத்துவமனைக்கு செல்லுங்கள் என ஆறுதலாக கமெண்ட் செய்து வருகின்றனர். 

பல நாட்கள் கழித்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த படத்தில் நடிக்கிறார் குஷ்பு. சிவா இயக்கும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் மீனா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சூரி, சதிஷ் என நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். இமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். வெற்றி ஒளிப்பதிவு செய்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. 

லாக்டவுன் பிரச்சனையால் அண்ணாத்த படத்தின் ரிலீஸை தள்ளிப் போட்டார்கள். 2021ம் ஆண்டு பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக அண்ணாத்த ரிலீஸாகும் என்று கூறப்பட்டது. ஆனால் கொரோனா வைரஸ் பிரச்சனை தற்போதைக்கு முடிவதாக தெரியவில்லை. இதனால் திட்டமிட்டபடி படப்பிடிப்பை நடத்தி முடித்து பொங்கலுக்கு ரிலீஸ் செய்வது என்பது கடினமாகிவிட்டது. இந்த காரணத்தால் அண்ணாத்த படத்தை பொங்கலுக்கு பதிலாக அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் ரிலீஸ் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.