கடந்த ஆண்டு நடிகர் விவேக் நடிப்பில் வெளியான திரைப்படம் வெள்ளை பூக்கள். விவேக் இளங்கோவன் இந்த படத்தை இயக்கியிருந்தார்.விவேக் உடன் சார்லி, பூஜா தேவரியா ஆகியோர் நடித்திருத்தனர். இந்த படத்தில் விவேக்கின் மகனாக நடித்தவர் நடிகர் தேவ். இவர் 2014-ம் ஆண்டு வெளியான வாயை மூடி பேசவும் படத்தில் சிறிய ரோலில் அறிமுகமானார். அதைத்தொடர்ந்து ஒரு நாள் கூத்து படத்தில் நடித்திருந்தார். 

இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள வெப் சீரிஸ் PUBGOA. இந்த டீஸரை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்டார். Sci-Fi க்ரைம் ட்ராமாவான இந்த வெப் சீரிஸில் நடிகை விமலா ராமன் காவல் அதிகாரியாக நடித்துள்ளார். சம்பத் ராம், சாரா அன்னையா, இணையதள நிகழ்ச்சி தொகுப்பாளர் மோகன் ஆகியோர் நடித்துள்ளனர். ஆக்ஷன் நிறைந்த இந்த வெப் சீரிஸின் கதை என்னவென்றால், கோவாவில் நியூ இயர் பார்ட்டி கொண்டாட செல்கின்றனர் கேம் டெவலப்பர்ஸ். 

அங்கு நடக்கும் துப்பாக்கி சூடு பற்றிய கதை தான் இந்த  PUBGOA. லக்ஷ்மி நாராயண இந்த வெப் சீரிஸை இயக்கியுள்ளார். கார்த்திக் கே.தில்லை ஒளிப்பதிவு செய்துள்ளார். சாந்தன் இசையமைத்துள்ளார். அஸ்வின் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். சிவகுமார் கலை இயக்க பணிகளை கவனிக்கிறார். விர்சவல் ரியாலிட்டி வெப் சீரிஸ் என்பதால் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர் ரசிகர்கள்.  

டீஸரில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றிருப்பதால், கதையில் ட்விஸ்ட்டுகள் பல இருக்கும் என்று எதிர்பார்த்து வருகின்றனர். Zee5 தளத்தில் வரும் நவம்பர் 27-ம் தேதி வெளியாகிறது. இப்படத்தில் நடிக்கும் தேவ், தென்னிந்தியாவின் முதல் வெப் சீரிஸான ஹாப்பி டு பி சிங்கிள் என்ற வெப் சீரிஸில் நடித்தவர். இது இவருக்கு இரண்டாவது வெப் சீரிஸ் என்பதால் அவருக்கு வாழ்த்துக்களை பதிவு செய்து வருகின்றனர் இணையவாசிகள். 

திரை ரசிகர்களுக்கு தரமான பொழுதுக்போக்குடைய படைப்புகளை தொடர்ந்து அளித்து வருகிறது ZEE5 தமிழ். கடைசியாக கார்த்திக் ராஜ் மற்றும் ரம்யா பாண்டியன் நடிப்பில் முகிலன் எனும் வெப் சீரிஸை வெளியிட்டது. உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவான இந்த வெப் சீரிஸ் அமோக வரவேற்பை பெற்றது.