பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு நேற்று காலையில் எழும் போதே வீட்டில் புதிய டாஸ்க்கிற்கான செட்டப் போடப்பட்டு இருந்தது. மணிகூண்டு என பெயரிடப்பட்டு உள்ள இந்த டாஸ்கில் போட்டியாளர்கள் மொத்தம் 5 அணிகளாக பிரிந்து இதில் பங்கேற்கவேண்டும். ஒவ்வொரு அணியினரும் தலா 3 மணி நேரம் மணிக்கூண்டில் நின்று நேரத்தை கணிக்க வேண்டும். எந்த அணி சரியாக கணிக்கிறதோ அது தான் வெற்றியாளர். ஒவ்வொரு அணிக்கும் மூன்று வாய்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 

அதனால் மொத்தம் 45 மணி நேரத்திற்கும் மேல் இந்த டாஸ்க் நடைபெற உள்ளது. காலை பாத்ரூம் பயன்படுத்துவதில் இருந்து சமைப்பது, சாப்பிடுவது வரை அனைத்திற்கும் டைம் டேபிள் கொடுக்கப்பட்டு உள்ளது. அதை நேரத்தை கணிக்கும் டீமில் இருக்கும் கிளி தான் சரியாக செய்கிறார்களா என பார்க்க வேண்டும்.

இந்த டைம் டேபிள் அடிப்படையில் தான் அனைத்தும் நடைபெறவேண்டும் என்பதால் சமைப்பது கூட இனி தாமதமாக தான் நடைபெற உள்ளது. அதன் பின் போட்டியாளர்கள் தமிழ் உள்ளிட்ட எந்த மொழி வார்த்தைகளையும் பயன்படுத்தாமல் ஜிப்ரிஸ் மொழியில் பேச வேண்டும் என டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதில் போட்டியாளர்கள் மிகவும் காமெடியாக பேசியது ரசிகர்களை நிச்சயம் சிரிக்க வைத்து இருக்கும்.

குறிப்பிட்ட நேரத்திற்கு பிக் பாஸ் வீட்டில் தண்ணீர் வரும் அப்போது குடத்தை வைத்து அனைவரும் தண்ணீர் பிடிக்க வேண்டும். அப்போது அர்ச்சனா மற்றும் நிஷா இருவரும் குழாயடி சண்டை போட்டனர். அவர்கள் முடியை பிடித்து உலுக்கி சண்டை போட்டது நிஜ சண்டை போலவே இருந்தது, ஆனால் அதை அவர் ஜாலியாக செய்ததாக நிஷா கூறினார். 

கருப்பு வெள்ளை படங்களை போல போட்டியாளர்கள் அனைவரும் பழைய படங்களை போல நடித்து காட்டவேண்டும் என சொல்லப்பட்டது. அதனால் ரியோ எம்ஜிஆர் போலவும், அனிதா சம்பத் எம்ஆர் ராதா போல சிறப்பாக நடித்தனர். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 45-வது நாள் ப்ரோமோ வெளியானது. 

மணிக்கூண்டு டாஸ்க் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. டாஸ்க் ஒரு புறம் இருந்தாலும், சனம் மற்றும் நிஷா இருவரும் சேர்ந்து தூங்கி வழிகின்றனர். இந்த நகைச்சுவையான ப்ரோமோ தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.