பிக்பாஸ் வீட்டில் வழங்கப்படும் டாஸ்க்குகள் தற்போது சூடுபிடித்து வருகிறது. முழு ஆர்வத்துடன் போட்டியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அதில் பாலாஜி முருகதாஸ் டாஸ்குகளில் சரியாக perform செய்வதில்லை என்கிற குற்றச்சாட்டும் சக போட்டியாளர்கள் மத்தியில் இருந்து கடந்த சில வாரங்களாகவே இருந்து வருகிறது.

கடந்த வாரம் நடைபெற்ற பாட்டி சொல்லை தட்டாதே டாஸ்கிலும் பாலாஜி சொதப்பியதால் மொத்த டாஸ்க்கும் திசை மாறி போனது. அதனால் மொத்த லக்சுரி பட்ஜெட் டாஸ்க் மதிப்பெண்களும் பறிக்கப்பட்டு பூஜ்ஜியம் மதிப்பெண்கள் மட்டுமே வழங்கப்பட்டது. இதற்கு முழு காரணமும் பாலாஜி முருகதாஸ் தான்.

இந்நிலையில் இந்த வாரம் 45 மணி நேரம் தொடர்ந்து மணிக்கூண்டு டாஸ்க் வழங்கப்பட்டு உள்ளது. அதில் போட்டியாளர்கள் 3 நபர் அணிகளாக பிரிய வேண்டும் என்றும், ஒவ்வொரு அணியும் தலா மூன்று மணி நேரம் வீதம் நேரத்தை மணிக்கூண்டில் நின்று கணிக்க வேண்டும் என டாஸ்க் கொடுக்கப்பட்டது.

இது இரவு பகல், வெயில் மழை என அனைத்திலும் நிற்காமல் நடக்கும் டாஸ்க் என்பதால் போட்டியாளர்கள் மழையிலும் குடை பிடித்து நின்றிருக்கிறார்கள். அதே போல இரவிலும் நேரத்தை கணிப்பது தொடர்ந்து நடப்பதால் போட்டியாளர்கள் அதிகம் சோர்வுடன் இருப்பது இன்றைய முதல் ப்ரொமோ வீடியோவில் காட்டப்பட்டு இருந்தது.

இந்நிலையில் கடந்த வாரத்தை போலவே இந்த வார டாஸ்க்கிலும் பாலாஜி முருகதாஸ் சொதப்புவது இரண்டாவது ப்ரோமோ வீடியோவில் காட்டப்பட்டு இருக்கிறது. இரவில் மற்றொரு அணி நேரத்தை கணிக்கும் டைம் முடிந்தபிறகு அடுத்து பாலாஜியின் டீம் தான் அங்கு சென்று மணிக்கூண்டில் நிற்க வேண்டும். ஆனால் பாலாஜி தூங்கிக்கொண்டு இருக்கிறார், அவரை எழுப்பினாலும் எழவில்லை. அதன் பின் எழுந்து 'ஏன் இப்படி பதறுகிறீர்கள்' என சொல்லி அவர் கூலாக பேசுகிறார்.

பாலாஜி இப்படி செய்வதால் இந்த வார லக்சுரி பட்ஜெட் டாஸ்க் மதிப்பெண்களை அவர்கள் இழக்க போகிறார்கள் என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது. அதனால் மற்ற போட்டியாளர்களும் பாலாஜி மீது கடுப்பில் இருப்பது ப்ரொமோ வீடியோவில் தெரிகிறது. ரம்யா மற்றும் அனிதா இருவரும் சேர்ந்து அழைத்து தூங்கி கொண்டிருக்கிறார் பாலாஜி. இதனால் மிகுந்த அப்செட்டில் உள்ளனர் பிக்பாஸ் வீட்டினர்.