ஐ போன் வாங்க கிட்னியை விற்ற இளைஞர் ஒருவர் தற்போது உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கும் சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சீனா நாட்டைச் சேர்ந்த அன்ஹுய் மாகாணத்தைச் சேர்ந்த 25 வயதான வாங் ஷாங்கன் என்ற இளைஞர், சிறு வயது முதலே ஐ போன் மீது தீராத காதலாக இருந்து உள்ளார்.

அத்துடன், தான் எப்படியும் ஐ போனை வாங்கி விட வேண்டும் என்று ஆசைப்பட்டு உள்ளார். ஆனால், அவரிடம் அதற்கான பணம் இல்லாத நிலையில், அந்த ஆசை தள்ளிக்கொண்டே சென்று உள்ளது. இதன் காரணமாக, அந்த இளைஞர் பெரும் அளவில் உழைத்து பணம் சம்பாதித்து, ஐ போன் வாங்க வேண்டும் என்று திட்டமிட்டார்.

அந்த தருணத்தில், அந்த நபருக்கு சில கூடா நட்புகள் அறிமுகம் ஆகி உள்ளனர். அந்த கூடா நண்பர்களில் சிலர், ஆன்லைன் கள்ளச் சந்தையில் கிட்னியை வாங்கும் நண்பர்களின் அறிமுகம் அவருக்கு கிடைத்து உள்ளது.

இதனையடுத்து, அந்த நண்பர்களின் ஆசை வார்த்தைகளில் மயங்கிப் போன அந்த இளைஞர், தனது வலது புறத்தில் உள்ள கிட்னியை 3273 அமெரிக்க டாலர்களுக்கு விற்று உள்ளார். இந்த சம்வவம் நிகழ்ந்த போது, அந்த இளைஞருக்கு வெறும் 17 வயது தான் ஆகி உள்ளது. அதன் படி, அவருக்கு அறுவை சிகிச்சை மூலம், அந்த கிட்னியை அவர் எடுத்து அவர் விற்றதாக கூறப்படுகிறது.

கிட்னியை விற்ற பணத்தில், அந்த இளைஞர் ஐ போன் 2,மற்றும், ஐ போன் 4 ஆகியவற்றை வாங்கி உள்ளார். இதனையடுத்து, உயிர் வாழ ஒரு கிட்னி மட்டுமே போதும் என்றும், அவர் கூறி வந்தார்.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த இளைஞருக்கு மற்றொரு கிட்னியும் தொற்றினால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. அந்த இளைஞனின் உடல் நிலையைக் கவனித்த அவரது தாயார், இது குறித்து விசாரித்து உள்ளார். அப்போது, அந்த இளைஞர் வேறு வழியின்றி, உண்மை கூறி உள்ளார். இதனைக் கேட்டு அவரது தாயார் கடும் அதிர்ச்சியடைந்தார்.

இதனையடுத்து, அந்த இளைஞனின் தாயார், தன் மகனை மூலை சலவை செய்து கிட்னியை விற்க தூண்டிய அவனது நண்பர்கள் குறித்து, அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட அந்நாட்டு போலீசார், இந்த வழக்கில் தொடர்புடைய 9 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அந்த 9 பேரிடமும் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன், இதுவரை எத்தனை பேரிடம் இது போன்று மோசடியில் ஈடுபட்டு கிட்னியை வாங்கி விற்று உள்ளார்கள் என்ற கோணத்திலும் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக, கிட்னியை விற்ற அந்த இளைஞர், தற்போது தினந்தோறும் டயாலாசிஸ் செய்தால் மட்டுமே உயிர் வாழ முடியும் என்ற மிக மோசமான நிலையில் உள்ளதாகவும், அவரது தாயார் மற்றும் மருத்துவர்கள் கவலைத் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.