தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா இன்று தனது 36வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரையுலகை சேர்ந்தவர்களும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் நயன்தாரா நடிக்கும் திரைப்படம் நெற்றிக்கண். மிலிந்த் ராவ் இந்த படத்தை இயக்கிவருகிறார். ஆர்.டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு கிரிஷ் இசையமைக்கிறார். திலீப் சுப்ராயன் ஸ்டண்ட் இயக்கம் செய்கிறார். லாரன்ஸ் கிஷோர் எடிட்டிங் செய்கிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த மாதம் வெளியானது. நயன்தாரா இந்த படத்தில் பார்வையற்றவராக நடித்துள்ளார் என்ற தகவலும் கிடைத்தது. 

நயன்தாராவின் பிறந்தநாளான இன்று நெற்றிக்கண் படத்தின் டீஸரை வெளியிட்டது படக்குழு. நயன்தாரா கதை சொல்வதுடன் டீஸர் துவங்குகிறது. ஒரு ஊர்ல பாவப்பட்ட ஆட்டுக்குட்டிங்க நிறைய இருந்துச்சாம். அதை தெரிஞ்சுக்கிட்ட கெட்ட நரி அதோட வேலையை காமிச்சுக்கிட்டே இருந்துச்சாம். அப்போ ஒரு தைரியமான ஆடு அந்த நரி விழுவதற்காக ஒரு குழியை தோண்டி வச்சுச்சாம். அந்த நரியும் அந்த குழில நல்லபடியா வந்து விழுந்துச்சாம் என்று டீஸரில் கதை சொல்கிறார் நயன்தாரா. 

நெற்றிக்கண் நயன்தாராவின் 65வது படமாகும். கடந்த 1981-ம் ஆண்டு வெளியான ரஜினியின் நெற்றிக்கண் பட டைட்டிலை தான் அனுமதி பெற்றி பயன்படுத்தியுள்ளனர். நெற்றிக்கண் படக்குழுவினருக்கும், இன்று பிறந்தநாளை கொண்டாடும் நடிகை நயன்தாராவிற்கு வாழ்த்துக்களை பதிவு செய்வதில் பெருமை கொள்கிறது நம் கலாட்டா. 

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த படத்தில் முக்கிய ரோலில் நடிக்கிறார் நயன்தாரா. சிவா இயக்கும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் மீனா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சூரி, சதிஷ், குஷ்பு என நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். இமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். வெற்றி ஒளிப்பதிவு செய்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. 

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் உருவாகவுள்ளது. இதிலும் முக்கிய ரோலில் நடிக்கவுள்ளார் நயன்தாரா. விஜய்சேதுபதி ஹீரோவாக நடிக்கவிருக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சமந்தாவும் நடிக்கவுள்ளார். இந்த ஆண்டு காதலர் தினத்தன்று படத்தின் அறிவிப்பு வெளியானது. விரைவில் இதன் ஷூட்டிங் தொடங்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கவிருக்கிறார்.