“18 வயது கன்னி பருவத்தில் எனக்கு அபார்ஷன் நடந்தது” என்று, பிரபல ஹாலிவுட் நடிகை மனம் திறந்து பேசி உள்ளது வைரலாகி வருகிறது.

பெண்களுக்காக மீ டூ வந்த பிறகு, சாதாரண பெண்கள் முதல் மிகப் பெரிய பிரபலங்கள் வரை பலரும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமைகளைப் பற்றி வெளிப்படையாகப் பேசியும், புகார்கள் அளித்தும் வருகின்றனர். இதனால், பலரும் அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கி வருவதைத் தொடர்ந்து காணமுடிகிறது.

அந்த வரிசையில், அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல ஹாலிவுட் நடிகையான ஷாரன் ஸ்டோன், தற்போது மனம் திறந்து தனது ஆழ்மனத்தில் உள்ள ரகசியங்களை வெளிப்படுத்தி உள்ளார். 

“பேசிக் இன்ஸ்டிங்ட் என்கிற படத்தில் நடித்து உலக புகழ் பெற்ற நடிகை ஷாரன் ஸ்டோனுக்கு தற்போது 63 வயது ஆகிறது. அவர், தற்போது தனது வாழ்க்கையில் சந்தித்த பல அனுபவங்களைத் தொகுத்து ஒரு புத்தகமாக எழுதி உள்ளார்.

“தி பியூட்டி ஆப் லிவிங் டுவைஸ்” என்ற பெயர் கொண்ட அந்த புத்தகத்தில், தனது ஆழ்மனதில் இதுவரை ரகசியமாகக் காத்து வந்த பல நிகழ்வுகள் குறித்தும், சிறுவயதில் தான் சந்தித்த பாலியல் சார்ந்த விசயங்களையும் தொகுத்துக் கொடுத்திருக்கிறார்.

இதில் மிக முக்கியமாக, தன்னுடைய பள்ளிப் பருவம் பற்றி அந்த நடிகை விளக்கமாகக் கூறியிருக்கிறார்.

அதில், “நான் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த போது, ஆண் நண்பர் ஒருவருடன் நட்பு ஏற்பட்டு, அந்த நண்பருடன் சுற்றித் திரிந்து வந்தேன் என்றும், அந்த நண்பனுடன் தனிமையில் அதிகம் சந்தித்துக்கொண்ட போது, எதிர்பாராத விதமாக நான் கர்ப்பிணியானேன்” என்றும், நடிகை ஷாரன் குறிப்பிட்டு உள்ளார்.

இதன் காரணமாக, அங்குள்ள ஓஹியோ நகரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றிக்கு நான் ஓடோடி சென்று, அங்குள்ள மருத்துவர்களைச் சந்தித்து ஆலோசனை பெற்று அதன் பிறகு அந்த மருத்துவமனையில் நான் அபார்சன் செய்துகொண்டேன் என்றும், அந்த நடிகை கூறியுள்ளார்.

இதன் மூலமாக, “அபார்சன் செய்து மிக எளிது” என்றும், நடிகை ஷாரன் ஸ்டோன் அதில் குறிப்பிட்டு இருக்கிறார்.

அது நேரத்தில், அபார்சன் செய்த பிறகு எனக்கு அதிகப்படியான ரத்தப் போக்கு ஏற்பட்டது என்றும், ஆனாலும் அதனை நான் யாரிடமும் கூறாமல் ரகசியம் காத்து வந்தேன் என்றும், இதனால் நான் சென்ற இடத்திலெல்லாம் எனக்குத் தொடர்ந்து ரத்தப் போக்கு ஏற்பட்டு வந்தது” என்றும், அவர் கூறியுள்ளார்.

“என் நிலைமை மோசமடைந்தும், நான் ரகசியமான காத்து வந்தேன் என்றும், இது பற்றி நான் வெளியே கூறுவதற்கு எனக்கு அப்போது ஒருவரும் இல்லை” என்றும், அவர் உருக்கமாகப் பதிவு செய்துள்ளார்.

“அதன் பிறகு, ரத்தம் தோய்ந்த தனது துணிகளையும் மற்றும் உடைகளையும் தீயிட்டுக் கொளுத்தி எரித்து விட்டேன்” என்றும், அவர் கூறியுள்ளார். 

“பள்ளியில் ரத்தம் தோய்ந்த தனது துணிகளை எரித்து, அதனைப் பள்ளியில் இருந்த பீப்பாய் ஒன்றில் போட்டு விட்டு அதன் பிறகு நான் வகுப்புக்குச் சென்றேன்” என்றும், சோகம் நிறைய தனக்கு நேர்ந்த கொடுமைகளைப் பதிவு செய்து உள்ளார். 

“அதன் பிறகு, முறையாகப் பெற்றோர் ஆவதற்கான கவுன்சிலிங்கிற்கு சென்று நான் ஆலோசனை பெற்றேன் என்றும், அதன் தொடர்ச்சியாகவே நான் குடும்ப கட்டுப்பாடு பற்றி அறிந்தேன் என்றும், அதுவே மற்ற எல்லாவற்றையும் விட என்னை பாதுகாத்தது” என்றும், அவர் கூறியுள்ளார்.

“அதன் பிறகே, இது பற்றி பலரும் என்னிடம் பேச கூடிய சூழல் ஏற்பட்டது” என்றும்,  பிரபல ஹாலிவுட் நடிகை ஷாரன் ஸ்டோன், தனது புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார். இந்த பதிவு, தற்போது உலகம் முழுவதும் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.