“பிரபல டென்னிஸ் வீரர் ஜோகோவிச்சை மயக்க எனக்கு 60 ஆயிரம் யூரோக்கள் தருவதாக சொன்னார்கள்” என்று, பிரபல மாடல் அழகி நடாலிஜா ஸ்கெசிக் தெரிவித்து உள்ளார்.

டென்னிஸ் உலகின் நம்பர் ஒன் வீரராக தற்போது வரை திகழ்ந்து வருகிறார் செர்பியா நாட்டைச் சேர்ந்த ஜோகோவிச் என்னும் இளைஞர். இவர், விளையாட்டு உலகில் மட்டுமல்லாது, அந்நாட்டின் அடையாளமாகவும் திகழ்ந்து வருகிறார்.

இப்படியனா நிலையில், “டென்னிஸ் வீரர் ஜோகோவிச்சை மயக்கி எனது வலையில் விழ வைக்க, எனக்கு ஒருவர் 60 ஆயிரம் யூரோக்கள் தர 

முன் வந்ததாக” அந்நாட்டைச் சேர்ந்த மாடல் அழகி நடாலிஜா ஸ்கெசிக், கூறியுள்ளார். 

இது தொடர்பாக அவர் கூறும்போது, “டென்னிஸ் வீரர் ஜோகோவிச்சை பற்றி நான் கூறும் அனைத்தும் உண்மையே” என்றும், குறிப்பிட்டு இருக்கிறார்.

“லண்டன் நகரை பூர்வீகமாக கொண்ட ஒருவர், என்னை தொடர்பு கொண்டு முக்கியமான விசயம்  பேச வேண்டும் என்றும், என்னை நேரில் சந்திக்க வேண்டும்” என்றும், கேட்டுக்கொண்டார்.

அத்துடன், “என்னிடம் பேச ஒரு நாள் முழுவதையும் ஒதுக்கி தரும் படி அவர் கேட்டுக்கொண்டார் என்றும், நானும் தொழில் நிமித்தமாகத் தான் அவர் பேசுவதற்காகக் கேட்கிறார்” என்று நினைத்தேன் என்றும், கூறியுள்ளார்.

அத்துடன், அந்த நபரை குறிப்பிட்ட நாளில் சந்தித்து அவருடன் தொடர்ந்து பேசிய போதுதான், எனக்கு முழு விவரமும் தெரிய வந்தது” என்றும், அந்த மாடல் அழகி குறிப்பிட்டு உள்ளார்.

குறிப்பாக, “செர்பியா நாட்டிற்கு பெயரும், புகழும் சேர்த்து வரும் ஜோகோவிச்சிற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கத்தில், நான் அவரை மயக்க வேண்டும் என்றும், அதனை யாரும் கண்டுபிடிக்க முடியாத இடத்தில் வைக்கப்பட்ட கேமராவில் பதிவு செய்ய வேண்டும்” என்றும், அவர் என்னிடம் கூறியதாகவும் ஒப்புதல் வாக்குமூலம் அளித்து உள்ளார்.

“அப்படி, ஜோகோவிச்சை மயக்கினால், எனக்கு 60 ஆயிரம் யூரோக்கள் தருவதாகவும், இவற்றுடன் உலகின் எந்த பகுதிக்கு வேண்டுமானாலும் நான் இன்பச் சுற்றுலா செல்ல எனக்கு சலுகைகள் தருவதாகவும் அந்த நபர் என்னிடம் பேரம் பேசினார்” என்றும், மாடல் அழகி நடாலிஜா ஸ்கெசிக் தெரிவித்து உள்ளார்.

“இதனை கேட்டதும், எனக்கு அவரை அப்படியே அடிக்க வேண்டும் என்று தோன்றியது என்றும், இருந்தாலும் நான் அப்போது அதனை செய்யவில்லை” என்றும், அவர் குறிப்பிட்டு உள்ளார்.

முக்கியமாக, “எனக்கு தெரிந்து, அந்த நபருக்கு இந்த உலகத்தின் வேறு எந்தவொரு பெண்ணும் இதற்கு சம்மதம் சொல்லமாட்டார் என்றே தோன்றுகிறது என்றும், ஜோகோவிச் குடும்பஸ்தர் என்றும், அவர் நல்ல மனிதர் மற்றும் ஆகச் சிறந்த விளையாட்டு வீரர்” என்றும், மாடல் அழகி நடாலிஜா ஸ்கெசிக் கூறியுள்ளார். 

மாடல் அழகி நடாலிஜா ஸ்கெசிக், டென்னிஸ் வீரர் ஜோகோவிச்சை பற்றி கூறியுள்ள செய்தி, அந்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், உலகம் முழுவதும் இந்த செய்தி தற்போது வைரலாகி வருகிறது.