சினிமா பிரபலங்கள் பலரையும் கொரோனோ தொற்று மிரட்டி வருகிறது. இந்நிலையில் கடந்த வாரம் நடிகர் மாதவனுக்கும் கொரோனோ தொற்று இருப்பது உறுதி செய்ய்பட்டது. அதன்பின்னர் வீட்டில் தனிமைபடுத்தப்பட்ட அவர், தனது ராக்கெட்ரி திரைப்படத்தின் ட்ரைலரை சமீபத்தில் இணையத்தில் வெளியிட்டார். 

ரசிகர்களை ஈர்த்து அமோக வரவேற்பை பெற்று வரும் சூழ்நிலையில், தனது குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் மாதவன்.

இந்நிலையில் தனது குடும்ப உறுப்பினர்களுக்கு கொரோனோ பரிசோதனை மேற்கொண்ட போது, ஐந்து பேருக்கு கொரனோ இருப்பது கண்டறிப்பட்டிருப்பதாக நடிகர் மாதவன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அண்மையில் வெளியான ராக்கெட்ரி ட்ரைலருக்கு ரசிகர்களும், பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருவதற்கு, நன்றி கூறி வந்த நடிகர் மாதவன் தற்போது இந்த செய்தியை பதிவிட்டுள்ளார்.

இந்திய விஞ்ஞானியான நம்பி நாராயணின் வாழ்க்கை மையப்படுத்தி ராக்கெட்ரி என்ற படத்தை இயக்கி தயாரித்துள்ளார் நடிகர் மாதவன். இந்தியாவின் தலை சிறந்த விஞ்ஞானியான நம்பி நாராயணனை அழிக்க அவருக்கு தேச துரோகி என பட்டம் கட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இந்த படத்தை இயக்கியுள்ளார் மாதவன். அது மட்டும் இல்லாமல், இந்த படத்தில் நம்பி நாராயணனாகவே நடித்தும் உள்ளார். 

ஆறு மொழிகளில் வெளியான இந்த படத்தின் ட்ரைலருக்கு திரைத்துறையை சார்ந்த பிரபலங்கள் பலரும் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர். அதே போல் ட்ரைலரில் இடம் பெற்றுள்ள அனல் தெறிக்கும் வசனங்களும், சூர்யாவின் கௌரவ தோற்றமும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. விரைவில் இந்த படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனோ தொற்றின் இரண்டாவது அலை வேகமெடுக்க ஆரம்பித்துள்ளது. சினிமாத்துறையை சேர்ந்த பிரபலங்கள் பலர் கொரோனோ தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பதிவுகள் போடுவது வாடிக்கையாகி உள்ளது. ரன்பீர் கபூர், ஆலியா என பல பாலிவுட் பிரபலங்கள் பலர் இந்த கொரோனோ தொற்றால் பாதிக்கப்படுள்ளனர். சமீபத்தில் கூட மாஸ்டர் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ், தான் கொரோனோவால் பாதிக்கப்படிருப்பதாகவும், வீட்டிலே தன்னை தனிமைபடுத்தி கொண்டதாகவும், ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.