பாலிவுட்டில் வெளியான ஷமிதாப் என்ற படத்தின் மூலம் திரையுலகில் கால்பதித்தார். முதல் படத்திலே அமிதாப் பச்சன், தனுஷ் போன்ற நடிகர்களுடன் இணைந்து அசத்தினார். சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த 2017-ம் ஆண்டு தல அஜித் நடித்த விவேகம் படம் மூலம் தமிழ் திரையுலகில் என்ட்ரி தந்தார் அக்ஷரா. படத்தில் சில காட்சிகளில் வந்தாலும் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் அக்ஷரா. 

கடந்த ஆண்டு ராஜேஷ் எம் செல்வா இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்த கடாரம் கொண்டான் படத்தில் நடித்தார். கொரோனா வைரஸ் பிரச்சனையால் படப்பிடிப்புகள் ஏதும் இல்லாமல் வீட்டில் பாதுகாப்பாக இருக்கிறார் அக்ஷரா. ட்ரெண்ட் லவுட் Trend Loud நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிகை அக்‌ஷரா ஹாசன் முன்னணி பாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தை ராஜா ராமமூர்த்தி இயக்கியுள்ளார். 

அமெரிக்க மாப்பிள்ளை எனும் வெப்சீரிஸ் மூலம் திரை ரசிகர்களை ஈர்த்தவர் இவர். இந்த படத்தின் டைட்டில் அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு என்பது சமீபத்தில் தெரியவந்தது. புகழ்பெற்ற பாடகி உஷா உதுப் மிகபெரும் இடைவெளிக்கு பிறகு அக்‌ஷரா ஹாசனின் பாட்டியாக இந்த படத்தில் நடித்துள்ளார். 

டீனேஜ் பருவத்திற்கும், ஸ்மார்ட்டான பெண் பருவத்திற்கும் இடையே உள்ள கேரக்டரில், பெண்மையை போற்றும் விதமாக நடித்துள்ளார் அக்ஷரா. இதன் முதல் லுக் போஸ்டர் செப்டம்பர் 14-ம் தேதியன்று வெளியானது. படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியானது. டீஸரை பார்க்கையில் பவித்ரா எனும் ரோலில் அக்ஷரா நடித்துள்ளார் என்று தெரிகிறது. 

சுஷா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். கீர்த்தனா முரளி எடிட்டிங் செய்கிறார். அழகியகூத்தன் மற்றும் சுரேன் சவுண்ட் டிசைன் செய்துள்ளனர். படத்தில் மால்குடி சுபா, அஞ்சனா ஜெயப்பிரகாஷ், ஷாலினி விஜயகுமார், சுரேஷ் மேனன், ஜார்ஜ் மரியான் ஆகியோர் நடித்துள்ளனர். 

இந்நிலையில் அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு படத்தின் ட்ரைலர் தற்போது வெளியானது. உலகநாயகன் கமல் ஹாசன் இந்த ட்ரைலரை வெளியிட்டார். ட்ரைலர் காட்சிகளை வைத்து பார்க்கையில் யாருக்கும் தெரியாமல் ஏதோ செய்துவிட்டு அதை மூடி மறைக்கும் எண்ணத்தில் உள்ளார் அக்ஷரா.

இந்த படம் பாஸ்டனில் நடக்கும் கலிடியோஸ்கோப் இந்தியன் ஃபிலிம் ஃபெஸ்டிவலில் திரையிடப்பட உள்ளது. ட்ரைலர் வெளியாகிய தருணத்தில் இந்த செய்தி படக்குழுவினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அக்ஷரா கைவசம் அக்னிச் சிறகுகள் படம் உள்ளது. விஜய் ஆண்டனி மற்றும் அருண் விஜய் இணைந்து நடித்த இந்த படத்தை அம்மா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மூடர் கூடம் புகழ் நவீன் இயக்கி வருகிறார். ஷாலினி பாண்டே, ரைமா சென், தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வந்தனர். விஜி எனும் ரோலில் அக்ஷரா ஹாசன் நடித்துள்ளார்.