சுஜித் மீட்புப் பணிக்கு 11 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டதாக உலா வரும் செய்தி வெறும் வதந்தி என்று வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். தெரிவித்துள்ளார்.

சிறுவன் சுஜித் மரணத்தில் எழுந்துள்ள கேள்விகளுக்கு உரியப் பதில் சொல்லாமல் முதலமைச்சர் பதுங்கிக் கொள்ள முடியாது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் புதிய சர்ச்சையை ஏற்படுத்தினார். அத்துடன், சிறுவன் சுஜித் உடலை எடுத்ததில் மிகப் பெரிய மர்மம் இருப்பதாகத் தமிழ்ப் பேரரசு கட்சியின் பொதுச் செயலாளரும், திரைப்பட இயக்குநருமான கெளதமன் புதிய சர்ச்சை எழுப்பினார்.

Radhakrishnan

மேலும், ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவன் சுஜித்தை  மீட்கும் பணியின்போது மொத்தம் 11 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பகிரப்பட்டு வந்தன.

இந்நிலையில், இவற்றுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைப்பது தொடர்பாக இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன், இறந்த பிறகு சடலத்தை மீட்கும் விதிகளுக்கு உட்பட்டே சிறுவன் சுஜித் உடல் மீட்கப்பட்டதாகவும், இதற்காக சுமார் 600 க்கும் மேற்பட்டோர் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டதாகவும் தெரிவித்தார்.

Radhakrishnan

மீட்புப் பணியின்போது பணியாற்றியவர்களின் செயல்களைச் சந்தேகிப்பது சரியான அணுகுமுறை இல்லை என்றும், இந்த விமர்சனங்கள் எல்லாம் கவலை அளிக்கும் வகையில் இருப்பதாகவும் கூறினார். பேரிடர் மீட்புக் குழுவின் வழிகாட்டுதலின்படியே குழந்தை மீட்கப்பட்டதாகவும், சுஜித்தை மீட்டது தொடர்பாக அவரது பெற்றோருக்கு எல்லாத் தகவலும் தெரியும் என்று அவர் குறிப்பிட்டார்.

கும்பகோணம் தீ விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் சடலத்தைக் காட்சிப்படுத்தியதால் உலக அளவில் விமர்சனங்களை எதிர்கொள்ள நேரிட்டதால், உயிரிழந்த சிறுவனின் உடலைக் காட்சிப்படுத்தவில்லை என்றும் அவர் விளக்கம் அளித்தார். அத்துடன், மீட்புப் பணி என்பது 

வேறு, உயிரிழந்த சடலத்தை மீட்பது என்பது வேறு என்றும் பேசிய அவர், உயிருடன் இருக்கும் போது நடைபெறும் மீட்புப் பணியானது, சடலத்தை மீட்கும் போது, அது வேறுபடும் என்றும் சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக, மீட்புப் பணிக்காகப் பல கோடி ரூபாய் செலவானதாகப் பகிரப்படும் செய்திகள் அனைத்தும் வதந்தி என்று, சமூக வலைத்தளங்களில் உலா வரும் வதந்திகளுக்கு அவர் முற்றுப் புள்ளி வைத்தார்.