தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராகவும் நடிகராகவும் திகழும் ஜீவி பிரகாஷ் குமார் நடிப்பில் நாளை (டிசம்பர் 3ஆம் தேதி) உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது பேச்சுலர் திரைப்படம். தொடர்ந்து இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் ஜீவி நடித்துள்ள ஜெயில் திரைப்படம் வருகிற டிசம்பர் 9ஆம் தேதி ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து இயக்குனர் வெற்றிமாறனின் உதவி இயக்குனரான மதிமாறன் இயக்கத்தில் ஜீவி பிரகாஷ் குமார் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் இணைந்து நடிக்கும் செல்ஃபி திரைப்படம் தயாராகி வருகிறது. முன்னதாக இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் ஜீவி நடித்துள்ள இடிமுழக்கம் திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகளும் நடைபெற்று வருகின்றன.

அடுத்ததாக அறிமுக இயக்குனர் நிகேஷ் இயக்கத்தில் உருவாகும் ரெபெல் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் ஜீவி பிரகாஷ் குமார். முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல்ராஜா மற்றும் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் சார்பில் C.V.குமார் இணைந்து தயாரிக்கும் ரெபெல் படத்திற்கு ஜீவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

இந்நிலையில் இன்று (டிசம்பர் 2-ம் தேதி) பூஜையுடன் ரெபெல் படத்தின் படப்பிடிப்பு ரெபெல் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. முன்னணி இயக்குனர் பா.ரஞ்சித் அவர்கள் படப்பிடிப்பை தொடங்கி வைத்தார். எனவே தொடர்ந்து இப்படத்தின் அடுத்தடுத்து அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.