திருமணமானதால் தன்னை சந்திக்க வராமல் தவிர்த்து வந்த கள்ளக் காதலனை கொலை செய்ய பெண் ஒருவர், கூலிப்படையை ஏவிய கையில் துப்பாக்கி உடன் காத்திருந்த சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலத்தின் நொய்டாவில் தான் இந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்து உள்ளது. 

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவை சேர்ந்த 39 வயதான திருமணமான பெண் ஒருவர், கணவன் இல்லாத நிலையில் தனியாக வசித்து வந்தார்.

அப்போது தனது இரண்டு குழந்தைகளை டியூசனுக்கு அழைத்து செல்வதை வழக்கமாக கொண்டிருந்த அந்த பெண், தனது குழந்தைகளுக்கு டியூசன் சொல்லி கொடுக்கும் 35 வயது இளைஞருடன் நட்பாக பழகி வந்திருக்கிறார்.

பின்னாளில் அந்த பெண்ணுக்கு, டியூசன் மாஸ்டருக்கும் இரைடயே பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் அது கள்ளக் காதலாக மாறியிருக்கிறது.

இதனையடுத்து, அவர்கள் இருவரும் பல முறை தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்திருக்கிறார்கள். 

இந்த நிலையில் தான்,  டியூசன் மாஸ்டரான அந்த 35 வயதான அந்த இளைஞருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு நொய்டாவை விட்டு, தனது சொந்த ஊரான ஜான்பூர்க்கு சென்றிருக்கிறார்.

அப்போது, அவரது வீட்டி் அந்த டியூசன் மாஸ்டருக்கு திடீரென்று திருமணம் செய்து வைத்து உள்ளனர். இதனையடுத்து, டியூசன் மாஸ்டர் திருமணம் செய்துகொண்டு செட்டிலாகி விட்ட நிலையில், திருமணத்திற்கு முன்பு வரை இந்தப் பெண்ணிடம் பேசிய அந்த டியூசன் மாஸ்டர், தனது திருமணத்திற்கு பிறகு அந்த கள்ளக் காதலியிடம் பேசுவதை அடியோடு நிறுத்தி உள்ளார். 

அத்துடன், தனது கள்ளக் காதலியான அந்தப் பெண்ணின் செல்போன் எண்ணையும் அவர் ப்ளாக் செய்து விட்டார் என்றே கூறப்படுகிறது. இதனால், அந்த காதலி, அந்த டியூசன் மாஸ்டரிடம் பேச எவ்வளவோ முயன்றும், அவரால் பேச முடியவில்லை.

இதனால், கடும் ஆத்திரமடைந்த அந்த பெண், தனது கள்ளக் காதலனை தீர்த்து கட்ட முடிவு செய்து, அந்த பகுதியைச் சேர்ந்த கூலிப்படையை ஏவி உள்ளார்.

இந்த தகவல் உளவாளிகள் மூலமாக, அந்த பகுதியைச் சேர்ந்த காவல் துறைக்கு கிடைத்து உள்ளது. 

இதனை அடுத்து, காதலனை அடையாளம் காட்ட அங்குள்ள தேசிய நெடுச்சாலையின் மாநில எல்லையில் அந்த பெண் கையில் இரு நாட்டு துக்கிகள் மற்றும் கூலிப்படைக்கு முன் பணம் கொடுக்க சில ஆயிரம் ரூபாய் பணத்துடன், அந்த பெண் காத்திருந்து உள்ளார்.

அப்போது, அங்கு வந்த காவல் துறையினர் அந்த பெண் கையில் வைத்திருந்த பையை அதிரடியாக சோதனை செய்தனர். அப்போது, துப்பாகியுடன் அந்த பெண் போலீசாரிடம் வசமாக சிக்கிக்கொண்டார்.

இதனையடுத்து, அந்த பெண் வைத்திருந்த இரண்டு நாட்டுத் துப்பாக்கிகள் மற்றும் கூலிப்படைக்கு கொடுக்க வைத்திருந்த பணத்தை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். 

இதனையடுத்து, அந்த பெண்ணை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், “கள்ளக் காதலனை கொலை செய்வதற்காக சுமார் 4 லட்சத்திற்கு அப்பெண் கூலிப்படையை தயார் செய்து உள்ளது தெரிய வந்தது. 

இதனையடுத்து, அந்தப் பெண்ணின் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் முயற்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.