மின்சார வாரியத்தில் பணிபுரியும் அனைவரும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்பதால் இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

tamilnadu electricity board

மின் பகிர்மான வட்டங்களில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் வரும் 7-ம் தேதிக்குள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள உத்தரவு தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத அலுவலர்கள், பணியாளர்களுக்கு டிசம்பர் மாத ஊதியம் வழங்கப்படாது என்று மதுரை மண்டல தலைமைப் பொறியாளர் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார். மின்சார வாரியத்தில் பணிபுரியும் பெரும்பாலானோர் தடுப்பூசி செலுத்திக் கொண்டதாகவும், அனைவரும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்பதால் இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக மின்சார வாரியம் விளக்கம் அளித்துள்ளது. 

அதனையடுத்து வரும் 7-ம் தேதிக்குள்  அனைத்து ஊழியர்களும் தடுப்பூசி செலுத்தாவிட்டால் டிசம்பர் மாத ஊதியம்  வழங்கப்படாது  என மின்சார வாரிய அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. டிசம்பர் 7ஆம் தேதிக்குள் ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என மதுரை மண்டல பொறியாளர் சுற்றறிக்கை  வெளியிட்டார்.  தமிழகம் முழுவதும் உள்ள ஊழியர்களுக்கு இந்த உத்தரவு பொருந்தும் என்றும் மின்சார வாரிய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.  மின்சார வாரிய உத்தரவால் ஊழியர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில் ஊழியர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டதாகவும், ஆனால் தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கும் டிசம்பர் மாத சம்பளம் வழங்கப்படும் என்றும் மதுரை மண்டல  தலைமைப் பொறியாளர் உமாதேவி  விளக்கம் அளித்துள்ளார்.

மேலும் தற்போது  பொதுமக்கள் எளிதாக தடுப்பூசி பெறும் வகையில், தமிழக அரசு சார்பாக மெகா கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும், அரசின் முயற்சிக்கு நல்ல பலனும் கிடைத்துள்ளது. விரைவில் தமிழக முழுவதும் 100% தடுப்பூசி செலுத்துவதையே தமிழக அரசு குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே பொது இடங்களில் அனுமதி என்று தமிழக அரசு கடந்த 19-ம் தேதி ஆணை பிறப்பித்தது. பள்ளிகள், கல்லூரிகள், கடைகள், சந்தைகள் மற்றும் தெருக்கள், திரையரங்குகள் உள்ளிட்ட பொது இடங்களுக்கு செல்பவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டதை உறுதி செய்ய வேண்டும். மக்கள் கூடும் இடங்களில் அதிகாரிகள் உறுதி செய்வது அவசியம் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் செல்வோருக்கும்  தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டுள்ளது தமிழ்நாடு அரசு.