“பாலியல் வன்கொடுமை எனக்கு நடக்கவில்லை, என் தோழிகளின் பதிவையே நான் ஷேர் செய்தேன்” என்றும், நடிகை கெளரி கிஷன் விளக்கம் அளித்து உள்ளார்.

சென்னை கே.கே. நகரில் செயல்பட்டு வரும் பத்மசேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீதான பாலியல் தொல்லை விவகாரத்தில், அடுத்தடுத்து 40 மாணவிகள் குற்றச்சாட்டி உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அத்துடன், இது தொடர்பாக பல்வேறு முன்னாள் மாணவிகள், பொது மக்கள் மற்றும் பிரபலங்கள் பலரும், பத்மசேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலனுக்கு கடம் கண்டனங்களைத் தெரிவித்து, பாலியல் குற்றங்கள் தொடர்பாக தங்களது கருத்துக்களையும், அனுபவங்களையும் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

அதன் படி, சென்னை பத்மசேஷாத்ரி பள்ளி ஆசிரியரால் மாணவிகளுக்கு நடந்த பாலியல் குற்றச் செயல்கள் தொடர்பாக பிரபல இளம் நடிகை கெளரி கிஷன், தனது டிவிட்டர் பக்கத்தில் தனது சக தோழிகளின் பதிவுகளைத் தனது பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

அப்படிப் பகிரப்பட்ட பல பதிவுகளில் குறிப்பிட்ட ஒரு பதிவில், “பள்ளிக் காலங்களில் என்னைப் போன்று பல மாணவர்கள் இது போன்ற பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களால் வேதனை அடைந்தனர். பள்ளிகள் உங்களை வளர்த்தெடுக்கும் தளமாக இருக்க வேண்டுமே தவிர, நீங்கள் முத்திரை குத்தப்படிவீர்களோ என்ற பயத்தை விதைக்கக் கூடாது“ என்றும், குறிப்பிட்டு தனது தோழியின் பதிவு ஒன்றை, பகிர்ந்திருந்தார்.

அத்துடன், அந்த பதிவில், “அண்மையில் பிஎஸ்பிபி பள்ளியில் மாணவர்களுக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல்கள், தவறாகப் பேசுவது, சாதிக்கொடுமை, உடலை வைத்து அசிங்கப்படுத்துவது, ஆதாரங்கள் இல்லாமல் மாணவர்கள் மீது பழி சுமத்துவதும் உள்ளிட்ட பல விஷயங்கள் அடங்கும்” என்றும், அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனால், “பிரபல நடிகை கெளரி கிஷனுக்கும் பள்ளியில் படிக்கும் போது, இதுபோன்ற பாலியல் குற்றச் செயல்கள் நடந்துள்ளதாக, அவரே தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்” என்று,சமூக வலைத்தளங்களில் செய்திகள் பறந்தன. இது தொடர்பாக பலரும் “இது உண்மையா?” என்று, கேள்வி எளுப்பி இருந்தனர்.

இந்த நிலையில், இதற்கு பதில் அளித்துள்ள நடிகை கெளரி கிஷன், “நான் படிக்கும் போது, எந்த விதமான பாலியல் கொடுமைகளையும் நான் அனுபவித்ததில்லை. தோழிகள் அனுபவித்த அதிகார துஷ்பிரயோக கொடுமைகள் குறித்து தான் டிவிட்டரில் ஷேர் செய்திருந்தேன். ஆனால், அது பிஎஸ்பிபி பள்ளிபோல் எனக்கு நடந்ததாகப் பல ஊடகங்களில் தவறாக செய்தி வெளியாகி விட்டது” என்று வேதனையுடன் தனது கருத்துக்களை அவர் தற்போத தெரிவித்து உள்ளார்.