தெலுங்கு சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகி பின்னர் தென்னிந்தியாவின் பல திரைப்படங்களில் நடித்து வரும் நடிகை ரித்து வர்மா, நடிகர் தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி 2 திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார்.

மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான துல்கர் சல்மான் தமிழில் நடித்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தில் கதாநாயகியாக  நடித்து  பிரபலம் அடைந்தார்.கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் ரித்து வர்மாவின் நடிப்பு பலராலும் பேசப்பட்டது. அடுத்ததாக தமிழ் சினிமாவின் நட்சத்திர இயக்குனர்களில் ஒருவராக இருக்கும் கௌதம் வாசுதேவ் மேனனின் இயக்கத்தில் வெளிவரவுள்ள துருவநட்சத்திரம் திரைப்படத்தில் நடித்துள்ளார். 

தமிழ் சினிமாவின் சிறந்த நடிகர்களில் ஒருவரான சீயான் விக்ரம் நடிக்கும் துருவநட்சத்திரம் திரைப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் துருவநட்சத்திரம் திரைப்படத்திலிருந்து ரித்து வர்மா-விக்ரம் இணைந்து நடித்த பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. 

இந்நிலையில் நடிகை ரித்து வர்மா நீச்சல் குளத்தில் நீச்சல் உடையுடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். நீச்சல்குளத்தில் இருந்தபடி இயற்கை அழகை ரசிக்கும்  ரித்து வர்மாவின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ritu Varma (@rituvarma)