தமிழ்நாட்டில், பள்ளி வளாகங்கள் மற்றும் இன்னும் பிற இடங்களில் மாணவிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் பல மடங்கு அதிகரித்து உள்ளதாக அதிர்ச்சி அளிக்கும் புள்ளி விவரங்கள் வெளியாகி பீதியை ஏற்படுத்தி உள்ளன.

கடந்த ஆண்டு இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதால், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால், தொக்கத்தில் எந்த பாதிப்பு இல்லாமல் இருந்த நிலையில், மாதங்கள் செல்ல செல்ல பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் முன்பை காட்டிலும், தற்போது அதிகரித்துக் காணப்படுவதாக, மத்திய அரசு கடந்த நில மாதங்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் கூறியிருந்தது.

அதன் தொடர்ச்சியாக தற்போது சென்னை கே.கே நகரில் உள்ள பத்மா சேஷாத்திரி பள்ளியில் ஆன்லைன் வகுப்பின் போது, மாணவிகளிடம் ஆசிரியர் ராஜகோபாலன், பாலியல் ரீதியாக ஆபாசமாக நடந்து கொண்டதாக எழுந்திருக்கும் குற்றச்சாட்டுகள் தமிழகம் முழுவதும் உள்ள பெற்றோர்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. 

இதனைத் தொடர்ந்து, பல்வேறு பள்ளி மாணவர்கள் தங்களுக்கு எதிராக நடைபெற்ற பாலியல் வன்கொடுமைகளை சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பதிவு செய்து வருகின்றனர்.

அத்துடன், பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளானதாக 40 பள்ளி மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர் சென்னை காவல் துறை துணை ஆணையர் ஜெயலட்சுமிக்கு வாட்ஸ்அப் மூலமாகத் தகவல்கள் அனுப்பி உள்ளனர். 

இப்படியாக, பள்ளி வளாகங்கள் மற்றும் இன்னும் பிற இடங்களில் பெண் குழந்தைகளுக்கு எதிராக நடக்கக்கூடிய குற்றங்கள் மற்றும் பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் என்பது, தமிழகத்தில் வாடிக்கையாக நடக்கும் ஒன்றாகவே இருந்து வருகின்றது என்றுதான் வேதனையோடு குறிப்பிடத் தோன்றுகிறது.

அதற்குக் காரணம், தமிழகத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பது குறித்து காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளின் எண்ணிக்கை இதனை ஆணித்தரமாக உறுதிப்படுத்துகிறது என்பதே உண்மை.

அதாவது, தமிழ்நாட்டில் பெண் பிள்ளைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், பெண் பிள்ளைகள் படிக்கும் பள்ளி வளாகங்கள் மற்றும் இன்னும் பிற இடங்களில் தொடர்ந்து அதிகபடியான எண்ணிக்கையில் நடைபெற்று வருவதாக தற்போது அதிர்ச்சி அளிக்கும் புள்ளி விபரங்கள் வெளியாகி இருக்கின்றன.

அதன் படி, கடந்த 2004 ஆம் ஆண்டு முதல், 2019 ஆம் ஆண்டு வரை படிப்படியாகத் தமிழ்நாட்டில் பெண் பிள்ளைகளுக்கு எதிராக அதிகரித்து வரும் குற்றங்கள் தொடர்பாக அரசின் புள்ளி விவரங்களில் தற்போது தெரிய வந்திருக்கிறது.

அந்த புள்ளி விபரங்களின் படி, “கடந்த 2004 ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை, பெண் குழந்தைகளுக்கு எதிராகத் தமிழகத்தில் உள்ள பள்ளி வளாகங்களில் மட்டும் கிட்டதட்ட 166 பாலியல் வன்கொடுமை குற்றங்கள் அரங்கேறி வழக்குகளாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது தெரிய வந்திருக்கிறது.

குறிப்பாக, பெண் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் ரீதியான குற்றங்கள் கிட்டதட்ட 10,750 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு உள்ளதும் தற்போது தெரிய வந்திருக்கிறது.

அத்துடன், தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் பள்ளி வளாகங்கள் மற்றும் பிற இடங்களில் பள்ளி மாணவிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பாக புள்ளி விவரங்களின் படி, கடந்த 2006 ஆம் ஆண்டு வெறும் 2 வழக்குகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டு இருந்தன. ஆனால், இன்றைய தினம் பார்க்கும் போது, அந்த புள்ளி விபரங்கள் அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளன.

பள்ளி வளாகங்களில் மட்டும் மாணவிகளுக்கு எதிராக நடைபெற்ற பாலியல் குற்றங்கள்

2006 - 2
2010 - 3
2013 - 16
2018 - 25
2019 - 35

என்கிற வகையில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

அதே போல், தமிழகத்தில் பள்ளிகள் இல்லாமல் மற்ற இடங்களில் பெண் குழந்தைகளுக்கு எதிராக நடைபெற்ற பாலியல் குற்றங்கள் தொடர்பாக பார்க்கும் போது..

2004 - 166
2008 - 187
2014 - 1055
2018 - 2052
2019 - 2410

என்கிற அளவில் பெண் பிள்ளைகளுக்கு எதிராக பாலியல் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

இப்படி அதிர்ச்சி அளிக்கும் வகையில் பெண் பிள்ளைகளுக்கு எதிரான இந்த புள்ளி விவரங்கள் தற்போது தெரிய வந்திருப்பதின் மூலமாக, தமிழகத்தின் பல்வேறு பள்ளி வளாகங்கள் மற்றும் இன்னும் பிற இடங்களில் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் ரீதியாகவும் மற்றும் இன்னும் பிற முறைகளிலும் பாலியல் வன்கொடுமைகள் தொடர்ச்சியாக நடப்பது என்பது, ஆண்டுதோறும் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது என்பது, இதன் மூலம் தெரிய வந்திருப்பது வேதனையும், அதிர்ச்சியும் அளிக்கிறது.