சன் டிவியில் ஒளிபரப்பான ஆனந்தம் தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து தமிழ் சீரியல் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் லக்ஷ்மி வாசுதேவன்.இந்த தொடரின் மூலமே ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவராக மாறினார் லக்ஷ்மி வாசுதேவன்.

அடுத்ததாக தமிழ்,தெலுங்கு,கன்னட மொழிகளில் சில சூப்பர்ஹிட் தொடர்களில் நடித்து முக்கிய சீரியல் நடிகையாக உருவெடுத்தார் லக்ஷ்மி.விஜய் டிவியின் சூப்பர்ஹிட் டான்ஸ் நிகழ்ச்சியான ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியிலும் பங்கேற்று அசத்தியுள்ளார் லக்ஷ்மி.

அடுத்ததாக ரியோ-ரச்சித்தா நடித்த சரவணன் மீனாட்சி தொடரில் நெகட்டிவ் கேரக்டரில் நடித்து அசத்தியிருந்தார் லக்ஷ்மி.ஜீ தமிழின் சூப்பர்ஹிட் தொடரான ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து வந்தார்,சில மாதங்களுக்கு முன் இந்த தொடரில் இருந்து சில காரணங்களால் விலகினார் லக்ஷ்மி.

இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருவார் லக்ஷ்மி.தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒர்க்கவுட் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார் லக்ஷ்மி.இவர் ஒர்க்கவுட் செய்யும்போது தனது செல்லப்பிராணி டிஸ்டர்ப் செய்வது போல ஒரு வீடீயோவை வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ செம ட்ரெண்ட் அடித்து வருகிறது.