கொரோனாவை கட்டுப்படுத்த தமிழகத்தில் மேலும் ஒரு வார காலம் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்தியாவில் கொரோனா தாக்கத்தின் 2 வது அலை தீவிரமாகவே பரவி வருகிறது. அந்த தாக்கம் தமிழகத்தில் தற்போது எதிரொலித்துக்கொண்டு இருக்கிறது.

இதனால், தமிழகம் முழுவதும் அதிகரித்து வந்த கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த கடந்த 10 ஆம் தேதி முதல் தளர்வுகள் உடன் கூடிய ஊரடங்கு முதலில் பிறப்பிக்கப்பட்டது. ஆனால், பலரும் இந்த ஊரடங்கு விதிகளை மதிக்காமல் தேவையின்றி வெளியே ஊர் சுற்றித் திரிந்ததால், கொரோனா வைரஸ் தொற்றானது மேலும் அதிகரித்து காணப்பட்டது.

இதன் காரணமாக, கடந்த 24 ஆம் தேதி முதல், தமிழகம் முழுவதும் தளர்வுகளின்றி முழு ஊரடங்கு உத்தரவு ஒரு வாரத்திற்கு பிறப்பிக்கப்பட்டு, தற்போது அமலுக்கு உள்ளது.

இதன் காரணமாக, தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று பாதிப்பானது கணிசமாக ஒரளவிற்கு சற்று குறைந்து வருகிறது என்று தினசரி பாதிப்பு எண்ணிக்கையின் மூலம் தெரிய வந்திருக்கிறது.

அத்துடன், தமிழ்நாட்டில் தினசரி கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கையானது 36 ஆயிரத்தைக் கடந்து வந்த நிலையில், தற்போது நேற்றைய தினம் சற்று குறைந்து 33,764 ஆக குறைந்து காணப்பட்டு உள்ளது. ஆனால், தமிகழத்தில் கொரோனா உயிரிழப்பு அதிகரித்து வண்ணமே உள்ளன. 

மேலும், “தமிழகத்துக்குத் தேவைப்பட்டால் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு நீட்டிக்கப்படும்” என்று, கடந்த வாரம் பேசும்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில், “தமிழகத்தில் முழு ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுமா என்பது குறித்தும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும்” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை முக்கிய ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மருத்துவம், வருவாய்த்துறை, பொதுத்துறை மற்றும் காவல் துறை உயரதிகாரிகள் கலந்து கொண்டு, தங்களது ஆலோசனைகளை வழங்கினர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தின்போது பேசிய முதலமைச்சர் மு.க ஸ்டாலின், “தமிழகத்தில் கோவை, திருச்சி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கொரோனா தாக்கம் இன்னும் குறையவில்லை” என்று, கவலைத் தெரிவித்தார்.

“கொரோனா தொற்று அதிகம் உள்ள கோவை, திருச்சி உள்ளிட்ட 6 மாவட்டங்களிலும், பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என்றும், அடுத்த ஒரிரு வாரங்கள் மாவட்ட ஆட்சியர்கள் முனைப்புடன் செயல்பட வேண்டும்” என்றும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

இந்த கூட்டத்தில், “தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் முழு ஊரடங்கை நீட்டிக்கலாமா? தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கை அமல்படுத்தலாமா?” என அதிகாரிகளிடம் கருத்துக் கேட்கப்பட்டது.

அத்துடன், “மளிகை மற்றும் காய்கறி கடைக்கு மட்டும் அனுமதி தரலாமா?” என்றும், இன்றைய கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. ஆனால், இந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில், எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும், தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில், “தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த மேலும் ஒரு வாரம் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கை நீட்டிக்கப்பட உள்ளதாக” தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. 

இது, “தளர்வுகள் அற்ற ஊரடங்கா? தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கா? என்பது பற்றி முழு விபரங்களைத் தமிழக அரசு விரைவில் அறிவிப்பாக வெளியிடும் என்றும், தகவல்கள் வெளியாகி உள்ளன.