கள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்த தாயையும், தங்கையையும் கள்ளக் காதலனை வைத்து, அக்காவே கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

எல்லா கள்ளக் காதல் உறவுகளும் கொலையில் தான் வந்து முடியும் என்பதற்கு, இந்த சம்பவமும் கூடுதலாக வந்து சாட்சி சொல்கிறது.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே தான் இப்படி ஒரு கொடூர சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

மதுரை மாவட்டம் மேலூர் அடுத்து உள்ள பதினெட்டாங்குடி கிராமத்தை சேர்ந்த 47 வயதான நீலா தேவி, என்பவர் வசித்து வந்தார். இவருக்கு 2 பெண் பிள்ளைகள் உள்ளனர். அதில், மூத்த மகள் மகேஸ்வரிக்கு, ஏற்கனவே திருமணம் நடந்து முடிந்த நிலையில், அவர் தனது கணவர் வீட்டில் வசித்து வந்தார். இதனால், இளைய மகள் 22 வயதான அகிலாண்டேஸ்வரி மட்டும் தாய் நீலா தேவியுடன் வசித்து வந்தார்.

இப்படியான நிலையிளல், திருமணம் செய்துகொடுக்கப்பட்ட மூத்த மகள் மகேஸ்வரி, அதே பகுதியைச் சேர்ந்த சசிகுமார் என்பவருடன், திருமணத்தை மீறி கள்ளத் தொடர்பில் இருந்து வந்து உள்ளார். இதனால், அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்த தொடர்ந்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார்கள்.

ஒரு கட்டத்தில் இருந்த விசயம் தனது தாயார் நீலா தேவிக்கும், 22 வயதான தங்கை அகிலாண்டேஸ்வரிக்கும் தெரிய வந்தது. இதனால், தாயும், தங்கையுமாக சேர்ந்து மகேஸ்வரியை அவர்கள் கண்டித்து உள்ளனர். இது, மகேஸ்வரிக்கு எரிச்சை உண்டு பண்ணி உள்ளது. 

அத்துடன், தாயும் - தங்கையுமாக சேர்ந்து மகேஸ்வரிக்கு தொடர்ந்து அறிவுரை கூறி, அவரை கண்டித்து வந்ததால், ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த மகேஸ்வரி, தனது கள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்த ஒரே காரணத்தால், தாயையும் -  சகோதரியையும் தனது கள்ளக் காதலன் சசிகுமார் உதவியுடன் திட்டம் போட்டு கொலை செய்து உள்ளார். 

அதன் படி, தாய் நீலாதேவியும், தங்கை அகிலாண்டேஸ்வரிம் தங்களது வீட்டில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாகக் கிடந்துள்ளனர். அதனைப் பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர், போலீசாருக்கு தகவல் அளித்து உள்ளனர். இத குறித்து வரைந்து வந்த போலீசார், இருவரின் சடலங்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்த நீலா தேவியின் மூத்த மகள் மகேஸ்வரிக்கு, ஏற்கனவே திருமணம் நடந்து முடிந்ததும் அவர் கள்ளக் காதல் உறவில் வேறு ஒருவருடன் தொடர்பில் இருந்ததும் தெரிய வந்தது. 

அத்துடன், இந்த கள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்ததால், தாயையும் சகோதரியையும் தனது கள்ளக் காதலன் சசிகுமார் உதவியுடன் கொலை செய்ததும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, இந்த வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த மகேஸ்வரியை, போலீசார் அதிரடியாக கைது செய்து தீவிரமாக விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில், “மகேஸ்வரியின் கள்ளக் காதலன் சசிகுமார் தான், இந்த இரு கொலைகளையும் செய்தது உறுதி” செய்யப்பட்டது.

இதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், சசிகுமாரை மிக தீவிரமாக தேடி வருகிறார்கள். 

இதனிடையே, கள்ளக் காதல் இன்பத்திற்காக பெற்ற தாய் மற்றும் சொந்த தங்கையை. அக்காவே கொலை செய்த சம்பவம் மதுரை மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.