சினிமா பாணியில் வீடியோ காலில் தொழிலதிபர்களுக்கு ஆசை வலை வீசிம் பெண்களை நம்பி, ஏராளமான தொழில் அதிபர்கள் லட்சக்கணக்கான பணத்தைப் பறிகொடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருக்கும் கட்கோபர் பகுதியைச் சேர்ந்த சாஹில் நடர், ரஞ்சித் மோர் இவர்களது கூட்டாளியான அர்பாஸ் கான் ஆகிய 3 பேரும், அதே பகுதியைச் சேர்ந்த தங்களுக்குத் தெரிந்த சில இளம் பெண்களை வைத்து, சினிமா பாணியில் அதுவும் மிகவும் நூதன முறையில் விபச்சாரம் செய்து வந்திருக்கிறார்கள்.

அதுவும் எப்படி என்றால், இந்த 3 இளைஞர்களும் சேர்ந்து, முதலில் தங்களிடம் உள்ள இளம் பெண்களை வைத்து, அந்த பகுதியிலேயே உள்ள மிகப் பெரிய தொழிலதிபர்களுக்கு வீடியோ காலில் பேசி ஆசை வலை விரித்து, அவர்களைப் பேசி மயக்க வைத்து, தங்களது ஆபாச வலையில் விழ வைப்பார்கள். 

அப்படியே, வீடியோ காலில் விழும் பெரும் செல்வந்தர்களையும், தொழில் அதிபர்களையும் அந்த பகுதியில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட ஹோட்டலுக்கு பணத்துடன் வர வைப்பார்கள்.

இளம் பெண்களின் இந்த காம வலையில் விழும் தொழிலதிபர்கள், அந்த பெண்களின் மேல் உள்ள மோகத்தால், அவர்களும் பணத்துடன், குறிப்பிட்ட ஹோட்டலுக்கு வந்து விடுவார்கள்.

அதன் பிறகு, அந்த ஹோட்டல் ரூமில், அந்த பெண்களோடு தொழில் அதிபர்கள் நெருக்கமாக இருக்கும் நேரம் பார்த்து, பக்கத்து அறையில் மறைந்திருக்கும் 
சாஹில் நடர், ரஞ்சித் மோர், அர்பாஸ் கான் ஆகியோரும், இன்னும் சிலரும் அங்கு வந்து, அந்த தொழில் அதிபரிடம் “இவள் என் மனைவி, நான் அவள் கணவன் என்றும், மற்றவர்கள் இந்த பெண்ணின் உறவினர்கள்” என்றும் கூறி, சம்மந்தப்பட்ட தொழிலதிபரை மிரட்டுவார்கள். 

அத்துடன், “உங்கள் மீது பாலியல் பலாத்கார புகார் அளித்து, உங்களை சிறையில் அடைத்து விடுவோம்” என்றும், அவர்கள் மிரட்டுவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார்கள்.

மேலும், இந்த விசயத்தை போலீசாரிடம் சொல்லாமல் இருக்கவும், இதனை பெரிய அளவில் பிரச்சனையாக ஆக்காமல் இருக்கவும், அந்த தொழில் அதிபர்களிடம் பணம் கேட்டு மிரட்டுவார்கள். அவரிடம் எத்தனை லட்சங்கள் பணத்தை கரக்க முடியுமோ, அந்த அளவுக்குப் பணத்தைப் பறித்துக்கொண்டு, அவர்களை ஏமாற்றி பணம் பறிப்பதை வாடிக்கையாக கொண்டிருந்தார்கள்.

இப்படியாக, இந்த மோசடி பாலியல் கும்பலில் சிக்கி பல தொழில் அதிபர்களும் லட்சக்கணக்கான பணத்தை பறிகொடுத்து இருக்கிறார்கள். இது குறித்து. அந்த 
பகுதியைச் சேர்ந்த போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனால், இந்த மோசடி கும்பலைப் பிடிக்க போலீசார் திட்டம்போட்டு, அவர்கள் வலை விரித்து உள்ளார்கள். போலீசார் விரித்த வலையில், அந்த மோசடி கும்பால் தானாக வந்து சிக்கிக்கொண்டது. இதில், அனைவரும் கைது செய்யப்பட்ட நிலையில், ஷப்னம் என்பவர் மட்டும் தலைமறைவாக இருக்கிறார். அவரை பிடிக்கத் தனிப்படை போலீசார் தீவிரமா தேடி வருகின்றனர் 

இதனையடுத்து, கைது செய்யப்பட்ட பெண்கள் உட்பட மற்ற அனைவரிடமும் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.