பள்ளிக்கு சென்ற 12 ஆம் வகுப்பு மாணவியை, சக தோழியின் உறவினர் ஒருவர் போதை மருந்து கொடுத்து கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஹரியானா மாநிலம் குருஷேத்ரா மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கிராமத்தில் 17 வயது மாணவி ஒருவர், தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இந்த மாணவி, அங்குள்ள அரசுப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். 

இப்படியான சூழ்நிலையில், கடந்த 22 ஆம் தேதி காலை வழக்கம் போல், அந்த மாணவியைத் தனது தந்தை உடன் இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு சென்று உள்ளார். 

இதனையடுத்து, எப்போதும் மாலை 4 மணி அளவில் வீடு திரும்பும் அந்த மாணவி, அன்றைய தினம் வீடு திரும்பவில்லை. இதனால், பயந்து போன மாணவியின் தந்தை பள்ளிக்கு சென்று பார்த்து உள்ளார். அங்கு, மகள் இல்லாததைக் கண்டு இன்னும் பயந்து உள்ளார். 

இதனையடுத்து, மகளின் சக தோழிகளிடம் விசாரித்து உள்ளார். ஆனால், யாருக்கும் எந்த தகவலும் தெரியவில்லை. அத்துடன், பள்ளி மற்றும் மகளின் தோழிகள் வீடு என்று பல இடங்களில் தனது மகளை தேடி அலைந்து உள்ளார். இப்படியாக, எங்குத் தேடியும் மகள் கிடைக்காத நிலையில், பயந்து போன மாணவியின் தந்தை, இரவு 7 மணி அளவில் அங்குள்ள குருஷேத்ராவில் உள்ள பராரா சவுக் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றுகொண்டு இருந்தார்.

அப்போது, அந்த வழியில் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர், ஒரு மாணவியை நடுவில் அமர வைத்து, அவரின் தலையில் நாட்டுத் துப்பாக்கியை வைத்து கடத்திச் சென்றுகொண்டிருந்தனர். இதனை அந்த வழியாகச் சென்ற அந்த மாணவியின் தந்தை பார்த்து, அந்த மாணவியை உற்று நோக்கி உள்ளார். அப்போது தான் தெரிந்தது, அந்த தனது மகள் என்று, இதனால் பதறித் துடித்த அந்த தந்தை, அவர்களிடம் எப்படியோ போராடி தனது மகளை மீட்டு உள்ளார். அப்போது, அந்த மாணவி நல்ல மயக்கத்தில் இருந்து உள்ளார்.

இதனையடுத்து, அங்குள்ள காவல் நிலையத்தில் தனது மகள் கடத்தப்பட்டது குறித்து புகார் அளித்தார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், முதலில் அந்த மாணவியை அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அப்போது, அந்த மாணவியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அந்த மாணவிக்கு போதை மருந்து கொடுக்கப்பட்டிருந்ததை உறுதி செய்தனர்.

இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து நடத்திய தீவிர விசாரணையில், சில அதிர்ச்சிகரமான தகவல்கள் தெரிய வந்தது.

அதாவது, சம்பவத்தன்று அந்த மாணவி தனது நெருங்கிய தோழியின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார். அங்கு, அந்த மாணவிக்கு சற்று மயக்கம் ஏற்பட்டு உள்ளது. இதனால், அங்கேயே அவர் மயங்கி உள்ளார். 

இதன் காரணமாக, தோழியின் உறவினரான இளைஞர் ஒருவர், தோழியின் வீட்டில் அவரை இறக்கிவிடுவதாகக் கூறி தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துக்கொண்டு சென்று உள்ளார். 

ஆனால், அந்த மாணவியின் வீட்டில் அவரை இறக்கவிடாமல், தனது நெருங்கிய கூட்டாளி ஒருவர் பணியாற்றும் ஹோட்டலுக்கு அந்த மாணவியை அழைத்து 

சென்றிருக்கிறார். பின்னர், அங்கு வைத்து அந்த மாணவியை அவனும், அவனது சக கூட்டாளிகள் 4 பேர் என மொத்தம் 5 பேர் சேர்ந்து, அந்த மாணவியை மாறி மாறி கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர். இதனையடுத்து, அந்த மாணவியை அங்கிருந்து அவர்கள் வேறு இடத்திற்கு கடத்திச் சென்ற போது, அந்த மாணவியின் தந்தையால் அவர் மீட்கப்பட்டார்.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த போலீசார், மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த 5 பேரில் 3 பேரை அதிரடியாகக் கைது செய்து, தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த 3 பேரில் இருவருக்கு 18 வயதும் நடப்பதும், ஒருவருக்கு 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவன் என்பதும் தெரிய வந்தது.

அத்துடன், தலைமறைவாக இருக்கும் மேலும் இருவரைக் காவல் துறையினர் மிகத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இதனால், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியும், பீதியும் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.