9 ஆம் வகுப்பு படிக்கும் மகளை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய கொடூர தந்தை மீது போக்சோ சட்டம் பாய்ந்து உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த தந்தை ஒருவர் தான், இப்படி ஒரு கொடூரச் செயலில் ஈடுபட்டிருக்கிறார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்து உள்ள குன்னத்தூர் மதுரா அகஸ்தியம்பட்டு கிராமத்தில், 47 வயதான கன்னியப்பன் - 35 வயதான ராஜேஸ்வரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இதில், இவர்களுடைய மகள் அங்குள்ள குன்னத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்தார்.

இப்படியான சூழ்நிலையில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் இறுதியில் கொரோனா காரணமாக, ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில், அனைத்து கல்வி மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டன.

இதனால், பள்ளியில் படித்து வந்த இவர்களது மகள் வீட்டிற்குள்ளேயே இருந்தார். அப்போது, சிறுமியின் தந்தையான 47 வயதான கன்னியப்பனும் வேலைக்குச் செல்லாமல், வீட்டிலேயே இருந்து உள்ளார்.

அப்போது, மிகச் சரியாகக் கடந்த 8 மாதத்திற்கு முன்பு தந்தையான கன்னியப்பன், தன்னுடைய மகளிடமே சபலப்பட்டு உள்ளார். இதனால், தனது மகள் என்றும் பார்க்காமல் 9 ஆம் வகுப்பு படித்து வந்த அந்த சிறுமியிடம் பாலியல் ரீதியில் தவறாக நடந்துகொண்டு உள்ளார். 

அதாவது, வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து, தனது மகளை மிரட்டியே பலவந்தமாக அவர் பாலியல் பலாத்காரம் தொடர்ந்து செய்து வந்திருக்கிறார்.

இதன் காரணமாக, சிறுமியின் உடலில் பல மாற்றங்கள் நிகழ்ந்து உள்ளது. இப்படியான சூழ்நிலையில், கடந்த சில வாரங்களாக 9 ஆம் வகுப்பு முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், அந்த சிறுமி மீண்டும் பள்ளிக்குச் சென்று வந்து உள்ளார்.

இந்நிலையில், நேற்று முன் தினம் அந்த 9 ஆம் வகுப்பு மாணவி, கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. அந்த மாணவி, பள்ளியிலேயே மயங்கி விழுந்து வாந்தி எடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால், அந்த மாணவி கர்ப்பமாக இருப்பது பள்ளி நிர்வாகத்திற்குத் தெரிய வந்தது. 

இதையடுத்து, அந்த பள்ளி நிர்வாகம் மற்றும் குன்னத்தூர் கிராம பொது மக்கள் காமக்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அந்த சிறுமியை, பரிசோதனை செய்ததில் அந்த சிறுமி, 8 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. இதனால், ஒட்டு மொத்த பள்ளிக்கூடமும் கடும் அதிர்ச்சியடைந்தது

அதன் தொடர்ச்சியாக, சிறுமி கர்ப்பமாக இருப்பது குறித்து திருவண்ணாமலை மாவட்ட சமூக நலத்துறைக்கு, பள்ளியின் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக விரைந்து வந்த அதிகாரிகள், விசாரணை மேற்கொண்டனர். இதில், அந்த சிறுமியின் தந்தை கன்னியப்பனே, தனது மகளை பாலியல் பலாத்காரம் செய்து, கர்ப்பமாக்கியது தெரிய வந்தது.

அதன் தொடர்ச்சியாக, பாதிக்கப்பட்ட 9 ஆம் வகுப்பு மாணவியின் பாட்டி லட்சுமி, ஆரணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கன்னியப்பன் மீது புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய மகளிர் காவல் நிலைய போலீசார், கன்னியப்பனிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். இதில், பெற்ற மகளை அவர் பாலியல் பலாத்காரம் செய்தது உறுதி செய்யப்பட்டது. 

இதனையடுத்து, அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டார். பின்னர், ஆரணி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்டு, வேலூர் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட சிறுமி, தற்போது தொடர்ந்து மருத்துவ சிகிச்சையில் இருக்கிறார்.