ஈபிஎஸ் - ஓபிஎஸ் பக்கம் அதிமுக தொண்டர்கள் அனைவரும் ஓரணியாக நிற்பது, தேர்தலில் பலத்தைக் காட்டுவதாக அமைந்துள்ளது என்று கூறப்படுகிறது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 73 வது பிறந்த நாளை அதிமுக வினர் மிகவும் கோலகலமாக கொண்டாடி மகிழ்ந்தார்கள்.

அதன் படி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வமும் ஒன்றிணைந்து உற்சாகமாகக் கொண்டாடி மகிழ்ந்தனர். 

குறிப்பாக, “அதிமுக தொண்டர்கள் அனைவரும் தங்களது வீடுகளில் தீபம் ஏற்றி, உறுதி மொழி எடுக்க வேண்டும்” என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வமும் ஏற்கனவே வேண்டுகோள் விடுத்திருந்தனர். 

அதன் படியே, அதிமுகவின் பெரும்பான்மையான தொண்டர்கள் தங்களது வீடுகளில் தீபம் ஏற்றியும், உறுதி மொழி எடுத்தும் ஜெயலலிதாவின் 73 வது பிறந்த நாளை கொண்டாடி, பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்கள். 

அப்போது, மிகவும் விசேசமான வகையில் அதிமுகவின் கட்சி அலுவலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், ஓ. பன்னீர் செல்வமும் கேக் வெட்டி, மாறி மாறி ஊட்டிவிட்டனர். இது, அதிமுக தொண்டர்கள் மத்தியில் ஆச்சரியத்தையும், பிரமிப்பையும் ஏற்படுத்தியது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், ஓ. பன்னீர் செல்வமும் மாறி மாறி கேக் ஊட்டிவிட்ட இந்த புகைப்படம், இணையத்தில் பரவி பெரும் வைரலாகி வருகிறது. 

அதே நேரத்தில், “முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் தலைமையில் அதிமுக தொண்டர்கள் அனைவரும் ஓரணியாக நிற்பது, வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் தங்கள் பலத்தைக் காட்டுவது போல் பிரதிபலிக்கிறது” என்று, அதிமுக தொண்டர்கள் பலரும் தற்போது வெளிப்படையாகவே கருத்து கூறி வருகின்றனர்.

ஈபிஎஸ் - ஓபிஎஸ் ஆகியோரின் இந்த ஒற்றுமையானது, “எடப்பாடி பழனிசாமி தலைமையில் பிறந்த நாள் விழாவில் தொண்டர்கள் அனைவரையும் ஒன்றிணைத்தது, தேர்தல் நேரத்தில் தாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம் என்பதையும், தேர்தலை சந்திக்கத் தயார் நிலையில் இருக்கிறோம் என்பதையும் வெளிப்படுத்துவதைப் போல் அமைந்துள்ளது. இதனால், அதிமுக தலைமை தங்களது ஒற்றுமையை நிரூபித்து உள்ளனர்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் தலைமையில் அதிமுக தொண்டர்கள் அனைவரும் ஓரணியாக நிற்பது என்பது, பல்வேறு யுகங்களுக்குப் பதில் சொல்லும் விதமாக அமைந்துள்ளதாகவும், அரசியல் விமர்சகர்களால் பேசப்படத் தொடங்கி உள்ளன.

அதே போல், “தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டப் பேரவை தேர்தலை எதிர்கொள்வதற்கான முன்னோட்டமாக, ஜெயலலிதாவின் 73 வது பிறந்த நாளை ஒற்றுமையாகக் கொண்டாடி, அதில் வெற்றியும் பெற்றுள்ளது அ.தி.மு.க தலைமை” என்றும், அரசியல் விமர்சகர்கள் புகழாரம் சூட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.