தமிழ் திரையுலகில் காமெடி கதாநாயகனாக கலக்கி வந்த சந்தானம் தற்போது ஹீரோவாக அவதாரம் எடுத்து அசத்தி வருகிறார். தற்போது இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகியுள்ள திரைப்படம் டிக்கிலோனா. இந்த படத்தில் அனகா மற்றும் ஷிரின் ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளார்கள். 

மேலும் ஹர்பஜன் சிங் ,யோகி பாபு, முனிஸ்காந்த், மொட்டை ராஜேந்திரன், சாரா, ஆனந்தராஜ் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தில் இடம்பெற்ற பேர் வச்சாலும் வைக்காம என்ற சிங்கிள் சமீபத்தில் வெளியானது. இந்த பாடல் ஏற்கனவே கமல்ஹாசன் நடித்த மைக்கேல் மதன காமராஜன் என்ற படத்தில் இடம் பெற்ற பாடலின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் படத்தின் ஏதும் சொல்லாதே பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. யுவன் ஷங்கர் ராஜா பாடிய இந்த பாடல் வரிகளை கு.கார்த்திக் எழுதியுள்ளார். 

சந்தானம் நடிப்பில் அடுத்ததாக உருவாகி வரும் திரைப்படம் சபாபதி. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சந்தானம் பிறந்தநாளில் வெளியிட்டது படக்குழு. இந்த படத்தின் படப்பிடிப்பு கும்பகோணம் பகுதிகளில் நடந்து வருகிறது. இந்த படத்தை புதுமுக இயக்குனர் சீனிவாசன் இயக்கிக் கொண்டிருக்கிறார். இந்த படத்தில் சந்தானம் திக்குவாய் கேரக்டரில் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. மேலும் இப்படம் வருகிற ஏப்ரல் மாதத்தில் வெளியாக இருக்கிறது. 

பாரிஸ் ஜெயராஜ் படத்திற்கு திரையரங்கில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. நகைச்சுவை விரும்பிகள் இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.