17 வயது சொந்த அக்காவை 16 வயது கொண்ட சொந்த தம்பியே பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

கன்னியாகுமரி மாவட்டத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

கன்னியாகுமரி குளச்சல் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஒரு தம்பதியினர் வசித்து வந்தனர். இந்த தம்பதிக்கு, 17 வயதில் ஒரு மகளும், 16 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

இதில், கணவன் சென்னையில் தங்கி பணியாற்றி வந்திருக்கிறார். வீட்டில் இருந்த தாயார் மாற்றுத்திறனாளியாக இருந்து வந்து உள்ளார்.

இப்படியான சூழ்நிலையில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் இறுதியில் கொரோனா காரணமாகப் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கில் அனைத்து கல்வி மற்றும் தொழில் நிறுவனங்கள் மூடப்பட்ட நிலையில், சகோதரியான அந்த 17 வயது சிறுமியும், 16 வயதே ஆன அந்த சகோதரனும் அந்த வீட்டில் தனது தாயாருடன் தங்கி இருந்து உள்ளனர்.

அப்போது, சொந்த அக்கா மீதே சபலப்பட்ட அந்த 16 வயது சகோதரன், தனது அக்கா என்றும் பார்க்காமல் அவரை மிரட்டியே வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது.

இதில், பயந்துபோன 17 வயதான அக்கா, தம்பியின் மிரட்டலில் பணிந்துபோனதாகத் தெரிகிறது. அத்துடன், தொடர்ச்சியாக, அவர் தனது சகோதரியை பாலியல் பலாத்காரம் செய்த வந்ததாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து, அந்த 17 வயது சிறுமியின் உடலில் பல மாற்றங்கள் நிகழ்ந்து உள்ளன. இதனால், அந்த சிறு கருவுற்று உள்ளார். இதனால், இன்னும் அதிர்ச்சியடைந்த அந்த 17 வயது சிறுமி, பாலியல் பலாத்காரம் செய்தது சொந்த தம்பி என்பதால், இதனை வெளியே சொல்ல முடியாமல் மனசுக்குள்ளேயே தவித்து வந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் அந்த சிறுமியின் வயிறு வழக்கத்தை விட பெரிதாகவே, அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் எல்லாம் விசாரிக்க ஆரம்பித்து உள்ளனர். 

மேலும், இன்னும் சில மாதங்களில் தனக்குக் குழந்தை பிறந்து விடும் என்பதை உணர்ந்த அந்த 17 வயது சிறுமி, அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்குச் சிகிச்சைக்காகச் சென்று உள்ளார். 

அப்போது, அந்த சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர், இந்த சிறுமிக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்பதையும், இந்த சிறுமிக்கு இன்னும் 18 வயது ஆகவில்லை என்பதையும் உறுதிப்படுத்திக்கொண்டு, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகளிடம் புகார் அளித்து உள்ளார்.

இது குறித்து விரைந்து வந்த அதிகாரிகள், அந்த சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் தான், 16 வயது சிறுவன், தனது மூத்த சகோதரியை பாலியல் வன்புணர்வு செய்து கர்ப்பமாக்கிய சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.

மேலும், இது தொடர்பாக குளச்சல் அனைத்து மகளிர் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து சிறுமியின் தம்பியிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பரபரபப்பையும் ஏற்படுத்தி உள்ளது.