தமிழ் சினிமாவின் கிளாஸான இயக்குனர்களில் ஒருவர் கெளதம் மேனன். இவர் இயக்கும் படங்களில் ஆங்கிலத்தையும் தமிழையும் இணைத்து ஸ்டைலாக வழங்குவது இவரின் சிறப்பு. ஒரு பக்கம் படங்களை இயக்கி வந்தாலும் மறு பக்கம் நடிப்பிலும் அசத்தி வருகிறார். 

கடந்த ஆண்டு அன்வர் ரஷீத் இயக்கத்தில் வெளியான ட்ரான்ஸ் எனும் மலையாளம் படத்தில் நடிகர் ஃபஹத் ஃபாசிலுக்கு வில்லனாக நடித்திருந்தார் GVM. மேலும் கடந்த ஆண்டில் ஓ மை கடவுளே, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், ட்ரான்ஸ், பாவ கதைகள் (வான் மகள்) என தொடர்ந்து வெற்றி படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். கடைசியாக அவர் இயக்கி நடித்திருந்த படம் குட்டி ஸ்டோரி. ஆந்தாலஜி படமான இப்படத்தில் எதிர்பாரா முத்தம் என்ற கதையை இயக்கியிருந்தார். 

இதில் நடித்தும் இருந்தார் கெளதம். இதனை தொடர்ந்து சிம்புவை வைத்து நதிகளில் நீராடும் சூரியன் என்ற புதிய படத்தை இயக்கவுள்ளார். இந்நிலையில் கெளதம் மேனன் புதிய படம் ஒன்றில் இணைந்திருக்கும் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது டான்ஸ் மாஸ்டரும் பிக்பாஸ் பிரபலமுமான சாண்டி 3.33 என்ற படத்தில் லீடிங் ரோலில் நடிக்கிறார். 

இந்தப் படத்தில் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற சரவணன் மற்றும் ரேஷ்மா ஆகியோரும் நடிக்கின்றனர். திகில் படமாக இப்படம் உருவாகிறது. இதில் அமானுஷ்யங்களை ஆய்வு செய்பவராக கெளதம் மேனன் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பாம்பூ ட்ரீஸ் ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பாக ஜீவிதா கிஷோர் தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் நம்பிக்கை சந்துரு இயக்கி வருகிறார். அண்மையில் இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது.

பத்து தல படத்தில் சிம்புவுக்கு வில்லனாக நடிக்கிறார் கெளதம் மேனன். சிம்பு மற்றும் கெளதம் மேனன் வரும் காட்சிகள் திரையரங்கை அதிர வைக்கும் என்றே கூறலாம். கலாட்டா நேர்காணலில் பேசிய தயாரிப்பாளர் K.E. ஞானவேல்ராஜா இதை உறுதி படுத்தியுள்ளார். கன்னடத்தில் நார்தன் இயக்கத்தில் சிவராஜ்குமார், ஸ்ரீமுரளி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் முஃப்தி. 2017ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் தான் பத்து தல. இந்த படத்தை ஓபிலி என்.கிருஷ்ணா இயக்குகிறார். பிரியா பவானி சங்கர், டீஜே அருணாச்சலம், மனுஷ்ய புத்திரன், கலையரசன் ஆகியோர் நடிக்கின்றனர். இசைப்புயல் AR ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.